வவுனியா மாவட்ட செயலகத்தில் பணியாற்றும் அதிகாரி ADP ராகினி ஜெயராஜ், அனுமதி காணி ஒன்றின் போலி ஆவணத்தை உருவாக்கி 24 மில்லியன் ரூபாய்க்கு விற்பனை செய்த குற்றச்சாட்டின் கீழ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியாவின் போமிட் பகுதியில் உள்ள அனுமதி காணி ஒன்றை, சில வருடங்களுக்கு முன் போலி ஆவணங்களை பயன்படுத்தி விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பான தகவல் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்ததையடுத்து, விசாரணைகள் தொடுக்கப்பட்டன.
விசாரணையின் மூலம் சம்பவத்துடன் தொடர்புடையவர் என அடையாளம் காணப்பட்ட வவுனியா மாவட்ட செயலக அதிகாரி நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகள் முடிந்தவுடன் குறித்த அதிகாரியை நீதிமன்றத்தில் முற்படுத்துவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1