இன்று (19) காலை 08.00 மணிக்கு சேனநாயக்க சமுத்திரத்தில் உள்ள ஐந்து வான் கதவுகள் 6 அங்குலம் திறக்கப்பட்டுள்ளன. இது திறந்துள்ளதன் பின்னர், சில மணித்தியாலங்களில் அந்த வான்கதவுகள் 12 அங்குலம் உயரத்திற்கு திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலைமையின் காரணமாக, அம்பாறை, தமண, உகன, சம்மாந்துறை, காரைதீவு, சாய்ந்தமருது, கல்முனை, நாவிதன்வெளி, அட்டாளச்சேனை, அக்கரைப்பற்று, மற்றும் ஆலையடிவேம்பு ஆகிய பகுதிகளில் வெள்ளப் பெருக்கு, கடல்சரிவு போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும் என ஓய்வுபெற்ற சிரேஷ்ட வானிலை அதிகாரி க. சூரியகுமாரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலவரத்தில், மேற்கண்ட பகுதிகளுக்கு மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது




