Pagetamil
விளையாட்டு

`இளம் எம்.பி -யைக் கரம் பிடிக்கும் ரிங்கு சிங்’; யார் இந்த பிரியா சரோஜ்?

2023 ஐ.பி.எல்லில், குஜராத், கொல்கத்தா அணிகளுக்கிடையிலான போட்டியில், கொல்கத்தா அணியின் வெற்றிக்கு கடைசி 6 பந்துகளில் 29 ரன்கள் தேவை என்ற சூழலில், ஐந்து சிக்ஸர் அடித்து அணியை வெற்றிபெறவைத்து ஓவர் நைட்டில் மிகப் பிரபலமானார் ரிங்கு சிங்.

அதைத்தொடர்ந்து கொல்கத்தா அணியின் தவிர்க்க முடியாத வீரராக உருவெடுத்த ரிங்கு சிங், கடந்த டிசம்பரில் நடந்து முடிந்த ஐ.பி.எல் மெகா ஏலத்துக்கு முன்பாக அந்த அணியால் ரூ.13 கோடிக்குத் தக்கவைக்கப்பட்டார்.

மறுபக்கம், இந்திய டி20 அணியில் கிடைக்கும் வாய்ப்புகளில் சிறப்பாகச் செயல்பட்டுவருகிறார். அடுத்த வாரம், இந்தியாவில் தொடங்கும் இங்கிலாந்துக்கெதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியிலும் இவர் இடம் பிடித்திருக்கிறார். இந்த நிலையில், நாட்டின் இளம் வயது எம்.பி-யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரியா சரோஜை ரிங்கு சிங் கரம்பிடிக்கவிருக்கிறார் எனத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

யார் இந்த பிரியா சரோஜ்?

கடந்த ஜூன் மாதம் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், சமாஜ்வாதி கட்சியின் சார்பில் மச்லிஷாஹர் தொகுதியில் களமிறக்கப்பட்ட 25 வயது பிரியா சரோஜ், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் போலாநாத் (பி.பி. சரோஜ்) பெற்ற வாக்குகளைவிட 35,850 வாக்குகள் அதிகமாகப் பெற்று நாட்டின் இளம் எம்.பி-க்களில் ஒருவரானார்.

தொழில்முறையில் ஒரு வழக்கறிஞராகப் பிரியா சரோஜ் அறியப்பட்டாலும், அவரின் குடும்பம் நீண்ட அரசியல் பின்னணி கொண்டது. பிரியா சரோஜின் தந்தை தூபானி சரோஜ், இதே மச்லிஷாஹர் தொகுதியில் 1999, 2004, 2009 ஆகிய தேர்தல்களில் சமாஜ்வாதி சார்பாகப் போட்டியிட்டுத் தொடர்ச்சியாக மூன்று முறை எம்.பி-யாக வெற்றி பெற்றிருக்கிறார்.

அதைத்தொடர்ந்து, உத்தரப்பிரதேசத்தில் கடத்த 2022-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கேரகட் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ-வாக வெற்றி பெற்றார். இத்தகைய அரசியல் பின்புலம் கொண்ட பிரியா சரோஜிக்கும், கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்குக்கும் தற்போது திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்திருக்கிறது. இது தற்போது, அரசியல் மற்றும் கிரிக்கெட் வட்டாரங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஓய்வு பெற்ற வீரர்கள் பங்கேற்கும் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் விரைவில்

east tamil

இலங்கையின் முதல் டெஸ்ட்… 1996 உலகக் கோப்பை கப்டனின் உதயம்

Pagetamil

புரட்டியெடுக்கும் அவுஸ்திரேலியா: காலியில் கதிகலங்கி நிற்கும் இலங்கை!

Pagetamil

அவுஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம்: இத்தாலி வீரர் ஜன்னிக் சின்னர் சம்பியன்

Pagetamil

என் மகளுக்கு நிச்சயதார்த்தம் நடக்கவில்லை!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!