13.01.2025 அன்று மன்னார் மடு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட தேக்கம் அணைகட்டு பகுதியில் நீராட சென்ற மன்னார் காத்தாங்குளத்தை சேர்ந்த 21 வயது இளைஞன் காணாமல் போயுள்ளதை அடுத்து, கிராம மக்கள் மற்றும் பொலிசாருடன் மன்னார் கடல் படையினரும் தீவிரமாக தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அவரை கண்டுபிடிக்க முடியாமல், இரவு பகலாக தேடுதல் தொடர்ந்தும் எந்த வெற்றியும் இல்லை. இந்நிலையில், மல்வத்து ஒயா பெருக்கு எடுத்து அதிக நீர் வழிந்ததன் காரணமாக, தேடுதல் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இவருடைய உடல் தண்ணீருடன் கடலுக்கு சென்று இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது என பொலிசார் தெரிவிக்கின்றனர்.
மேலும், மல்வத்து ஓயா பெருக்கு எடுத்ததன் விளைவால் தற்காலிகமாக தேடுதல் நடைவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1