Update – மாணவியை கடத்தியவர்களுக்கு நீதிமன்ற உத்தரவு

Date:

கம்பளை, தவுலகல பகுதியில் பாடசாலை மாணவி ஒருவரை கடத்திச் சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரையும், மற்றொரு சந்தேக நபரையும் இம்மாதம் 27ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 11ம் திகதி வேன் ஒன்றில் வந்த குழு சிறுமியை கடத்திச் சென்றது. சம்பவத்தின் பின்னர், தவுலகல பொலிஸார் மற்றும் சிறப்பு பொலிஸ் குழுக்கள் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.

13ம் திகதி, முக்கிய சந்தேக நபர் அம்பாறை நகரில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, 14ம் திகதி இச் சம்பவத்துடன் தொடர்புடைய இன்னொரு நபரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார். இக் கடத்தலுக்குப் பயன்படுத்திய வேனும் கண்டுபிடிக்கப்பட்டது, அதன் ஓட்டுநரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

கடத்தப்பட்ட சிறுமி பாதுகாப்பாக மீட்கப்பட்டு, சட்ட வைத்திய பரிசோதனைக்கு பிறகு, நீதிமன்றத்தின் அனுமதியுடன் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

தவுலகல பொலிஸார் தற்போது சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

மஹிந்த மீது குற்றப்பத்திரிகை இல்லை

'அரகலய' போராட்டக் காலத்தின்போது, ​​காலி முகத்திடலில்  அமைக்கப்பட்டிருந்த 'கோட்டாகோகம'  போராட்டக் களத்தில்...

திருமணம், தனியார் விருந்துக்கு டிஜே இசைக்கான உரிமக் கட்டணங்கள் தற்காலிகமாக நிறுத்தம்

இலங்கை படைப்பாளர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் சங்கம், தனது உறுப்பினர்களின் மேலதிக முடிவுகள்...

பணம், நகைகளை காட்டி ரீல்ஸ் வெளியிட்ட பெண் யூடியூபர் வீட்டில் 118 பவுன் திருட்டு

நாகர்கோவில் அருகே பணம், நகைகளை குவியலாக காட்டி, ரீல்ஸ் வெளியிட்ட பெண்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்