லொஸ் ஏஞ்சலில் பரவியுள்ள காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறைக்கைதிகள் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதில் பெண்களும் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த செவ்வாய்க்கிழமை முதல் பரவிய காட்டுத்தீயை அணைக்கும் நடவடிக்கையில் சிறைக்கைதிகள் அதிக அளவில் ஈடுபடுகின்றனர். அவர்களின் பங்களிப்பு தீயணைப்பு படையினருக்கு வலுவாக அமைகின்றது.
தீவிபத்தில் இதுவரை 37,000 ஏக்கர் நிலப்பரப்புகள் தீக்கிரையாகியுள்ளதோடு, தீ காரணமாக 16 பேர் உயிரிழந்ததாகவும், 10,000க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கட்டடங்கள் சிதைவடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

காடுகளில் பரவி வரும் தீவை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்களுடன் சிறைக்கைதிகளின் பங்களிப்பும் உழைப்பும் பாராட்டத்தக்கது. காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடும் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
காட்டுத்தீயின் தாக்கத்தால் லொஸ் ஏஞ்சல் பகுதி மக்கள் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டு வருவதால், அவசர உதவி நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.




