போதனா வைத்தியசாலையில் வைத்தியரைப்போல நுழைய முற்பட்ட நபர் கைது

Date:

போதனா வைத்தியசாலை ஒன்றினுள் தோளில் ஸ்டெடஸ்கொப்புடன் நுழைய முற்பட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் (05.01.2025) குருநாகல் போதனா வைத்தியசாலைக்குள் வைத்தியர் போல் தோளில் ஸ்டெதஸ்கொப்புடன் நுழைய முற்பட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக குருநாகல் பொலிஸார் தெரிவித்தனர்.

பொத்துஹெர ஹந்துகல பிரதேசத்தை சேர்ந்த 43 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து களனி பல்கலைக்கழகத்தின் ராகம மருத்துவ பீடத்தின் அடையாள அட்டை காணப்பட்டதுடன், குறித்த வைத்தியக் குழாய் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குருநாகல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

spot_imgspot_img

More like this
Related

மரத்தில் கட்டிவைக்கப்பட்ட இளைஞன் பொலிஸ் காவலில் உயிரிழந்த சர்ச்சை சம்பவம்!

கொபெய்கனே  பொலிஸாரின் காவலில் இருந்த சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக,...

மேய்ச்சல் தரை விவகாரம்: மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் முன் போராட்டம்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் பாரம்பரியமான மயிலத்தமடு மற்றும் மாதவனை மேய்ச்சல் தரைகளை சட்டவிரோத...

ஐ.ம.ச, ஐ.தே.க கூட்டும் வெற்றி பெறுவது சிரமம்!

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி இடையிலான கூட்டணி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்