ஐந்து ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு எதிராக வழக்கு: தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு

Date:

செலவு அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறிய 12 ஜனாதிபதி வேட்பாளர்களில் மீதமுள்ள 5 பேருக்கு எதிராக அடுத்த வாரம் வழக்கு தொடரப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி தற்போது ஏழு ஜனாதிபதி வேட்பாளர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

”செலவு அறிக்கை சமர்ப்பிப்பு முடிந்த அன்றே தபால் மூலம் அறிக்கை அனுப்பப்பட்டதால், ஒரு வேட்பாளர் மீது வழக்கு தொடரப்படாது” என தேர்தல் ஆணைக்குழு அதிகாரியொருவர் இது குறித்து தெரிவிக்கையில் கூறியுள்ளார்.

மேலும், செலவு அறிக்கையை வழங்காத வேட்பாளர் மீது வழக்குத் தொடரப்பட்டால், அந்த வேட்பாளர் மாகாண அல்லது உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வேட்பாளராக நிற்க முடியாது எனவும் தேர்தல் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

இதேவேளை கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத 1040 வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அண்மையில் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

குவைத்தில் 2 இலங்கைப் பெண்களின் மரணம் குறித்து விசாரணை

குவைத்தின் அலி சபா அல்-சலீம் மற்றும் அல்-நஹ்தா ஆகிய இடங்களில் தனித்தனி...

12 வயது சிறுவனை கொன்ற முதலை

கல்கிரியகம காவல் பிரிவுக்கு உட்பட்ட மனேருவ பகுதியில் உள்ள வம்பதுவெவ என்னுமிடத்தில்,...

சோமதேவாவின் அறிக்கையை நிராகரிக்கிறோம்

செம்மணி மனித படுகொலை தொடர்பாக தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் அறிக்கையை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்