போதனா வைத்தியசாலையில் வைத்தியரைப்போல நுழைய முற்பட்ட நபர் கைது

Date:

போதனா வைத்தியசாலை ஒன்றினுள் தோளில் ஸ்டெடஸ்கொப்புடன் நுழைய முற்பட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் (05.01.2025) குருநாகல் போதனா வைத்தியசாலைக்குள் வைத்தியர் போல் தோளில் ஸ்டெதஸ்கொப்புடன் நுழைய முற்பட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக குருநாகல் பொலிஸார் தெரிவித்தனர்.

பொத்துஹெர ஹந்துகல பிரதேசத்தை சேர்ந்த 43 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து களனி பல்கலைக்கழகத்தின் ராகம மருத்துவ பீடத்தின் அடையாள அட்டை காணப்பட்டதுடன், குறித்த வைத்தியக் குழாய் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குருநாகல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

spot_imgspot_img

More like this
Related

மட்டு செட்டிபாளையத்தில் வீடு ஒன்றில் இருந்து 60 இலட்சம் ரூபா பெறுமதியான சட்டவிரோத சுருக்கு வலைகள் 3 உடன் ஒருவர் கைது

மட்டக்களப்பு செட்டிபாளையம் பகுதியில் உள்ள வீடு ஒன்றை முற்றுகையிட்டு 60 இலட்சம்...

பொத்துவில் ஊறணி பாலத்திற்கு அருகில் யானை உயிரிழப்பு: மின்சாரம் தாக்கியதா என வனஜீவராசிகள் திணைக்களம் விசாரணை!

அம்பாறை மாவட்டம், பொத்துவில் - ஊறணி பாலத்திற்கு அருகில் காட்டு யானை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்