புதிய கல்வியாண்டு ஆரம்பமாகிவுள்ள நிலையில் மாணவர்களிடையே சுவாச நோய்கள் பரவும் சாத்தியம் உள்ளதாக சுகாதாரதுறை அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
பல்வேறு வைரஸ் சுவாச நோய்கள் பாடசாலைகளில் பரவக்கூடும் என வலியுறுத்தி லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் சுவாச நோய்கள் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் டொக்டர் சாந்த டி சில்வா தெரிவித்தார்.
மேலும், பல்வேறு வைரஸ் வகைகளைச் சேர்ந்த சுவாச நோய்கள் இவ்வாறு பரவக்கூடும் எனவும், மாணவர்களின் உடல்நிலை ஆரோக்கியத்தில் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை அதிகாரிகள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் எனவும் சுவாச நோய்களின் அபாயத்தைக் குறைக்க உடனடியாக தடுப்பு நடவடிக்கைகளை செயல்படுத்த வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1