சிறைச்சாலையில் உள்ளவர்களும் மனிதர்கள் என்பதால் அவர்களை மிருகங்களைப் போன்று சங்கிலியால் பிணைத்து திறந்த நீதிமன்றத்திற்கு கொண்டு வர வேண்டாம் என கொழும்பு மேலதிக நீதவான் பசான் அமரசேன நேற்று (2) சிறைச்சாலை அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட சந்தேகநபர்கள் குழுவிற்கு சங்கிலிகள் போடப்பட்டதை அவதானித்த நீதவான் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
“சந்தேக நபர்களை விலங்குகளைப் போல சங்கிலியால் பிணைத்து நீதிமன்றத்திற்கு கொண்டு வராதீர்கள். எனக்கு அது பிடிக்கவில்லை. அவர்களும் மனிதர்கள், அவர்களை மனிதர்களாகவே நடத்துங்கள்” என்று திறந்த நீதிமன்றத்தில் நீதவான் கூறினார்.
அவர்களை முறையான நடைமுறைகளின்படி நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதவான் மேலும் அறிவுறுத்தினார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1