காட்டு யானைகளின் பிரச்சினைக்கு உரிய தீர்வை பெற்றுத்தருமாறு கோரி அநுராதபுரம் – தந்திரிமாலய பிரதான வீதியில் ஓயாமடுவ பகுதியில் வீதியை முற்றாக மறித்து நேற்று (30) பிரதேசவாசிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தலாவ, எப்பாவல, கல்னாவ, நொச்சியாகம ஆகிய பகுதிகளில் உள்ள காட்டுயானைகளை வில்பத்து காப்புக்காட்டுக்கு கொண்டு செல்ல அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கையினால் ஓயாமடுவ பிரதேச மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து வீதியை முற்றாக மறித்து போராட்டம் நடத்தப்பட்டது.
தம்மால் பயிரிட்ட பயிர்கள் அனைத்தையும் தற்போது யானைகள் அழித்து விட்டதாக விவசாயிகள் ஊடகங்களுக்கு தெரிவித்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1