நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தை அண்மித்த பகுதியில் கட்டட வேலைப்பாடுகளில் ஈடுபட்ட மூவர், நேற்றைய தினம் (29.12.2024) மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து பொலிஸார், கட்டுமானப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மூவரும், இரும்புக் கம்பிகளால் தயாரிக்கப்பட்ட தற்காலிக கம்பிப்படிகளில் ஏறி பணியாற்றிய நிலையில், மின்சாரம் பாய்ந்ததால் அனர்த்தம் நேர்ந்துள்ளது என தெரிவித்துள்ளனர்.
மின்சாரம் தாக்கியதன் தாக்கத்தில் மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக கருத்துக்கள் வெளியாகியுள்ளன.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளதோடு, இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1