ஐயப்பன் பக்தர்களுடன் பிரதமர் ஹரிணியை சந்தித்தார் செல்வம் அடைக்கலநாதன்

Date:

வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் இன்று (21) பிரதமர் ஹரிணி அமலசூரியவை பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தார்.

தலைமன்னார் பகுதியில் இராணுவத்தினர், பொலிஸார் மற்றும்  கடற்படையினரால் கையகப் படுத்தப்பட்டுள்ள மக்கள் காணிகள், பொது இடங்கள், ஆலயங்களுக்கு சொந்தமான காணிகளில் இருந்தும் அரச படைகள் வெளியேறி மக்களது பாவனைக்காக வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் இதன்போது முன்வைக்கப்பட்டது.

மேலும், ஐயப்பன் பக்தர்கள் இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு யாத்திரையாக பயணிப்பதற்கான விமான பயணக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் விமான பயணக் கட்டணத்தை குறைக்குமாறு கோரினார்.

அத்துடன் கடவுச்சீட்டை பெறுவதற்காக பக்தர்கள் தமது பயணத்தின் நிமித்தம் கொழும்பு நகருக்கு பல அசௌகரியங்களுக்கு மத்தியில்  வந்து, இந்து கலாசார அமைச்சிடம் கையெழுத்து பெற்ற பின்னரே, கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ளும் நிலை காணப்படுகிறது. அதை தளர்த்தவேண்டியும், விமான கட்டணத்தை ஒரு நிர்ணய விலையில் சீராக பெறுவதற்கான ஒழுங்குகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமது கோரிக்கைகளை  பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பிரதமரிடம் முன்வைத்திருந்தார்.

மேலும், இந்த சந்திப்பில் தலைமன்னாரில் இருந்து மக்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாட சில பிரதிநிதிகளும் ஐயப்பன் பக்தர்களும் இணைந்திருந்தனர்.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பு நீதிமன்றில் எம்.பி அருச்சுணா, உட்பட 6 பேரை எதிர்வரும் நவம்பர் 16 ம்திகதி ஆஜராகுமாறு உத்தரவு விட்டு வழக்கு ஒத்திவைப்

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன். நாடாளுமன்ற...

திருகோணமலையில் முச்சக்கரவண்டியில் பிரயாணித்தவர்கள் மீது துப்பாக்கி சூடு ஒருவர் உயிரிழப்பு இருவர் படுகாயம்

திருகோணமலை கப்பல் துறை சந்திக்கு அருகில்  பிரயாணித்த முச்சக்கர வண்டி ஒன்றினை...

கந்தரோடையில் புத்தர் சிலை நிறுவப்பட்ட விவகாரம்; கடும் கண்டனம் வெளியிட்ட தமிழ் அமைப்புகள்!

யாழ்ப்பாணம், சுன்னாகம் கந்தரோடையில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தொல்லியல் தளத்தில் அனுமதியின்றி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்