ஜனாதிபதி அனுரகுமார திசா நாயக்க – இந்திய வெளியுறவு அமைச்சர் சந்திப்பு

Date:

தற்போது இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அனுரகுமார திசா நாயக்க நேற்று இரவு இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்ஷங்கரை சந்தித்தபோது மாகாண சபை தேர்தல் குறித்தான இலங்கை நிலைப்பாட்டை அறிவித்ததுடன், அது நடத்தப்படும் காலப் பகுதியையும் சுட்டி காட்டினார்.

அந்த வகையில், உள்ளுராட்சி சபை தேர்தல் மற்றும் அடுத்த வருடம் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ள மாகாண சபை தேர்தலுக்கான காலத்தை அரசாங்கம் தீர்மானித்துள்ளதை அறிய முடிகிறது.

ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களை இரத்து செய்து புதிய வேட்பு மனுக்களை கோரும் வகையில் உள்ளுராட்சி மன்ற தேர்தலை ஏப்ரல் முதல் பாதியில் நடத்தவும், ஏழு ஆண்டுகளுக்கு மேலாக தாமதமாகி வரும் மாகாண சபை தேர்தலை அடுத்த வருடம் செப்டம்பரில் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கருத்துக்கள் வெளியாகி உள்ளன.

இது தொடர்பான சட்ட நடவடிக்கைகளை விரைந்து முடிக்க தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாகவும் கூறியுள்ளார்.

மேலும், புதிய அரசியலமைப்பு வரும் வரை தமிழர்களுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு எட்டப்படும் வரை மாகாண சபை முறைமை மாறாது என ஜனாதிபதி இந்த சந்திப்பில் உறுதியளித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

spot_imgspot_img

More like this
Related

மீண்டும் தயாராகும் ஹிஸ்புல்லா

ஈரானிடமிருந்து பண உதவியைப் பெற்ற பிறகு, லெபனான் ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லா,...

நாளை பாடசாலைகளுக்கு விடுமுறை

தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (27)...

மட்டக்களப்பு முகத்துவாரம் ஆற்று வாய் கடற்பகுதி கடற்பரப்பில் ஆண் ஒருவரின் சடலம் மிதந்து கொண்டுள்ளது

மட்டக்களப்பு முகத்துவாரம் ஆற்று வாய் பகுதிக்கு நேராகக் காணப்படும் கரை நிலமட்டம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்