26.5 C
Jaffna
January 23, 2025
Pagetamil
தமிழ் சங்கதி முக்கியச் செய்திகள்

தேர்தல் தோல்வியுடன் சங்கு அணியில் குழப்பம்: 3 சிறிய கட்சிகளை வெளியே அனுப்ப முயற்சி!

கடந்த பொதுத்தேர்தலில் சங்கு சின்னத்தில் போட்டியிட்ட ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி பெரும் தோல்வியை சந்தித்ததை தொடர்ந்து, அந்த அணிக்குள் சில மாற்றங்கள் ஏற்படுமென தெரிகிறது. ஜனநாயக போராளிகள் மற்றும் தமிழ் தேசிய கட்சி ஆகியன கட்சிகளாக அந்த கூட்டணிக்குள் நீடிக்கும் வாய்ப்பு இருக்காதென தெரிகிறது.

இதேபோல, ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பை கூட்டணிக்கள் இணைத்து வைத்திருக்கவும் பிரதான தரப்புக்கள் விரும்பவில்லை.

இலங்கை தமிழ் அரசு கட்சிக்கு மாற்று சக்தி தாமே என பெருமெடுப்பில் பிரச்சாரம் செய்தபடி, சங்கு அணி, பொதுத்தேர்தலில் போட்டியிட்டது. என்றாலும், வன்னி தேர்தல் மாவட்டத்தில் மாத்திரம் ஒரு ஆசனத்தை வென்றது. அதுவும், 5000 வரையான விருப்பு வாக்கை பெற்று, மயிரிழையில் செல்வம் அடைக்கலநாதன் வெற்றியீட்டினார்.

இதேவேளை, யாழ் மாவட்டத்தில் சங்கு அணி சுலபமாக ஒரு ஆசனத்தை வெல்லும் நிலைமையிலிருந்த போதும், முறையான கூட்டணிப்பங்கீடு மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ் மற்றும் தமிழ் தேசியக்கட்சியென்பன சரியான வேட்பாளர்களை நிறுத்தாததால் அந்த வாய்ப்பை இழந்தது.

தற்போதைய நிலைமையில், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சிக்கலாகியுள்ளது. அமைப்புரீதியான மாற்றமொன்றை செய்தால் மட்டுமே அந்த அணி கரையேறும் என்ற நிலையில், அமைப்புரீதியான மாற்றமொன்றை செய்த அந்த அணி முயற்சிக்கிறது.

இதற்கு ஏதுவாக, அந்த கூட்டணியில் உள்ள பதிவு செய்யப்படாத கட்சிகளை அந்த கூட்டணிக்குள்ளிருந்து அகற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான யோசனை, அந்த கட்சியிலுள்ள பிரதான கட்சிகள் மட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

தற்போது, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் பதிவு செய்யப்படாத கட்சிகளாக சிறிகாந்தா தலைமையிலான தமிழ் தேசிய கட்சியும், ஜனநாயக போராளிகள் கட்சியும் உள்ளன. அந்த இரண்டு கட்சிகளும் மிகப்பலவீனமானவை என்பதுடன், வாக்காளர்களை ஈர்க்கும் நிலையிலும் இல்லாதவை.

எனினும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஆசன பங்கீட்டில்- யாழ் மாவட்டத்தில்- கிட்டத்தட்ட அனைத்துக் கட்சிகளுக்கும் சம அளவில் ஆசனப்பங்கீடு செய்யப்பட்டது. இது மிக முட்டாள்த்தனமான நடவடிக்கையென்ற போதும், எந்தவித அசௌகரியத்தையும் உணராமல் கட்சிகளின் தலைவர்கள் அந்த முடிவை எடுத்தனர்.

தேர்தல் தோல்வியின் பின்னர் தமது முட்டாள்த்தனமான முடிவை கட்சித் தலைவர்கள் உணர்ந்ததால், தற்போது தமது கூட்டணியிலுள்ள சிறிய கட்சிகளை அப்புறப்படுத்த முயற்சியை ஆரம்பித்துள்ளனர்.

ஜனநாயக போராளிகள் கட்சியும், தமிழ் தேசிய கட்சியும்- ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பிலுள்ள பதிவு செய்யப்பட்ட கட்சிகளுடன் இணைந்து, கூட்டணியில் அங்கம் வகிக்கலாம் என்பதே தற்போதைய யோசனை.

இதேவேளை, இந்த கூட்டணியிலுள்ள ஈ.பி.ஆர்.எல்.எவ் பதிவு செய்யப்பட்ட கட்சியாக இருந்தாலும், அதுவும் கழுதை தேய்ந்து கட்டெறும்பான நிலையில் உள்ளது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் வேட்பாளரை நிறுத்துமாறு ஈ.பி.ஆர்.எல்.எவ் இடம் கூறப்பட்டது. ஆனால் பருத்தித்துறையில் உள்ளூராட்சித் தேர்தலில் வட்டாரத்திலும் வெற்றிபெறாத சிவகுமார் என்பவரை வேட்பாளராக நிறுத்தியது. இதுபோதாதென, “நான் கிளிநொச்சியை சேர்ந்தவன். உருத்திரபுரத்தில்தான் வளர்ந்தவன். அங்கு படித்தேன். அங்கு எமக்கு நிலமுள்ளது. இது போதாதென நீங்கள் நினைத்தால், கிளிநொச்சியில் வேறு வேட்பாளரை நிறுத்துங்கள்“ என சுரேஸ் பிரேமச்சந்திரன் எகத்தாளமாக, ஏனைய கட்சிகளிடம் கூறியுமிருந்தார். சுரேஸின் இந்த நடவடிக்கை ஏனைய கட்சிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், புதிய நகர்வில்- ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் பாத்திரத்தை மட்டுப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இதேவேளை, ஈ.பி.ஆர்.எல்.எவ் தரப்பை கூட்டணியில் இணைத்து பயணிக்கக்கூடாது என்ற எண்ணம், சங்கு அணியின் பிரதான கட்சிகளிடம் காணப்படுகிறது.

இதேவேளை, இந்த தரப்புக்களை தவிர்த்து, மு.சந்திரகுமார் தலைமையிலான சமத்துவ கட்சி, தமிழ் அரசு கட்சியிலிருந்து வெளியேறிய ஜனநாயக தமிழ் அரசு கூட்டணியென்பவற்றை இணைத்து பயணிக்க பேச்சு நடந்து வருகிறது.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அட்டகாசத்தில் ஈடுபட்ட அர்ச்சுனாவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

Pagetamil

3 மணித்தியால இழுபறியின் பின் இஸ்ரேல்- ஹமாஸ் போர் நிறுத்தம் அமுலாகியது!

Pagetamil

அனுரவின் சீனப்பயணம்: 10 பில்லியன் டொலர் மதிப்பு முதலீடுகள் இலங்கைக்கு கிடைக்கும் வாய்ப்பு!

Pagetamil

மின் கட்டணம் 20 சதவீதத்தால் குறைப்பு!

east tamil

UPDATE: மன்னார் நீதிமன்றத்தின் முன் துப்பாக்கிச்சூடு; 2 பேர் உயிரிழப்பு!

Pagetamil

Leave a Comment