26 C
Jaffna
December 10, 2024
Pagetamil
உலகம்

நைஜீரியாவில் படகு கவிழ்ந்து 27 பேர் பலி

நைஜீரியாவில் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 27 பேர் பலியாகினர். 100 க்கும் அதிகமானோர் மாயமாகினர். அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

வடக்கு நைஜீரியாவின் நைஜர் ஆற்றில் நேற்று இந்தப் படகு விபத்து நடந்துள்ளது. விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. ஆனால் விபத்து நடந்தபோது படகில் 200 க்கும் அதிகமானோர் இருந்துள்ளதாகத் தெரிகிறது. அவர்கள் அனைவரும் கோகி பகுதியில் இருந்து நைகர் நகரில் உள்ள உணவுச் சந்தைக்குச் செல்லும் போது இந்த விபத்து நடந்துள்ளது.

விபத்து குறித்து தகவலறிந்து வந்த மீட்புக் குழுவினர் இதுவரை 27 சடலங்களை மீட்டுள்ளனர். 100 க்கும் மேற்பட்டோரை காணவில்லை. அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள். விபத்து நடந்து 12 மணி நேரத்துக்கும் மேல் ஆகியும் கூட மாயமானவர்களில் யாரும் உயிருடன் கிடைக்கவில்லை என்று கோகி மாவட்ட பேரிடர் சேவைகள் துறை செய்தித் தொடர்பாளர் சாண்ட்ரா மூஸா தெரிவித்துள்ளார்.

விபத்துக்கான காரணத்தை அரசுத் தரப்பு உறுதி செய்யாவிட்டாலும் கூட உள்ளூர் ஊடகங்கள் படகில் அதிகளவில் மக்கள் ஏற்றப்பட்டதாலேயே விபத்து நடந்த்து எனத் தெரிவிக்கின்றன. நைஜீரியாவில் சரியான சாலை வசதிகள் இல்லாத பகுதிகள் நிறைய இருக்கின்றன. அப்பகுதிகளில் எல்லாம் இன்றளவும் படகு சவாரி தான் ஒரே போக்குவரத்து வசதியாக இருக்கிறது. இந்நிலையில் அந்தப் படகுகளில் அதிகளவில் மக்களை ஏற்றுவதும் தொடர்கதையாக இருக்கிறது. இதனால் அவ்வப்போது விபத்துகளும் நடக்கின்றன. கடந்த ஒக்டோபர் 3ஆம் திகதி நடந்த படகு விபத்தில் 60 பேர் பலியானது நினைவுகூரத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சிரியா ஜனாதிபதி மொஸ்க்கோவில் தஞ்சம்

east pagetamil

14 வயது சிறுவனால் வரையப்பட்ட ஓவியம் – கவிழ்க்கப்பட்டது சிரியா ஆட்சி

east pagetamil

சிரியா முன்னாள் ஜனாதிபதி அசாத் பற்றிய மர்மம் விலகியது: ரஷ்யா புகலிடம் அளித்துள்ளது!

Pagetamil

சிரிய ஜனாதிபதியின் கதி என்ன?

Pagetamil

சிரியா தலைநகரும் கிளர்ச்சியாளர்களிடம் வீழ்ந்தது: அசாத் குடும்பத்தின் 50 ஆண்டுகால ஆட்சி முடிந்தது!

Pagetamil

Leave a Comment