டேர்பன் முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் தென்னாபிரிக்காவின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல், வெறும் 42 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது இலங்கை.
இலங்கை அணி, டெஸ்ட் போட்டிகளில் பெற்ற மிகக்குறைந்த ஓட்டம் இதுவாகும். தென்னாபிரிக்காவுக்கு எதிராக ஒரு அணியின் குறைந்த டெஸ்ட் ஸ்கோரும் இதுவாகும்.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்திருந்தது.
அதற்கமைய, தனது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, சகல விக்கட்டுக்களையும் இழந்து 191 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
தென்னாபிரிக்க அணி சார்பாக அதிகபட்சமாக அவ்வணியின் தலைவர் பவுமா 70 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
இலங்கை அணியின் பந்துவீச்சில் அசித பெர்னாண்டோ மற்றும் லஹிரு குமார ஆகியோர் தலா 3 விக்கட்டுக்கள் வீதம் கைப்பற்றினர்.
இந்நிலையில், தனது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 42 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.
இலங்கை அணி சார்பாக அதிகபட்சமாக கமிந்து மெண்டிஸ் 13 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.
தென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சில் மார்கோ ஜோன்சன் 41 பந்துகளை வீசி, 13 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை எடுத்தார்.
தென்னாபிரிக்கா முதல் இன்னிங்சில் 149 ரன்கள் முன்னிலை பெற்றது.
இரண்டாவது இன்னிங்ஸிற்காக ஆடி வரும் தென்னாபிரிக்கா, விக்கெட் இழப்பின்றி 28 ஓட்டங்களை பெற்று, இலங்கையை விட 177 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது.
நாளை போட்டியின் 3வது நாள்.