வவுனியா அலைகல்லு போட்டகுளம் உடைப்பெடுத்ததால் மாளிகை குளத்திற்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதாக கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் அறிவித்துள்ளார்.
இதன்காரணமாக மாளிகை குளம் உடைப்பெடுக்குமாக இருந்தால் ஆறுமுகத்தான் புதுக்குளம், மாளிகை, சேமமடு கிராம மக்களுக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் அப்பகுதி மக்கள் அவதானத்துடன் இருக்கவும். கால்நடைகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும். குறிப்பாக கால்நடைகள் கட்டி வைப்பதை தவிர்க்க வேண்டும் என அறிவித்துள்ளார்.
இதேவேளை, வவுனிக்குளம் 1.10 அடி நீர்பாய்கின்றது, இதன் நீர்வரத்து மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்ப்படுவதாக முல்லைத்தீவு அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
குறிப்பாக மாந்தை கிழக்கு, சிராட்டிகுளம்,ஏனைய பிரதேச மக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்ப்டுகின்றீர்கள்
அத்துடன் தங்கள் கிராமங்கள் துண்டிக்கப்படும் நிலை ஏற்பட்டால் தகவலை கிராம அலுவலர்களுக்கு தெரியப்படுத்தி தாங்கள் இருக்கின்ற இடங்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்ப்டுகின்றீர்கள்.




