26.3 C
Jaffna
March 2, 2025
Pagetamil
இலங்கை

வளி மண்டலவியல் திணைக்களத்தின் பிந்தைய அறிவித்தல்

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று முற்பகல் 11.30 மணியளவில் திருகோணமலையில் இருந்து கிழக்கே சுமார் 110 கிலோமீற்றர் தொலைவில் நிலை கொண்டிருந்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாட்டின் கிழக்கு கரையை அண்மித்து நகர்ந்து இன்று (27) அடுத்த 06 மணித்தியாலங்களில் புயலாக வலுவடையும் என திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்பின் தாக்கம் காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதுடன், வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் மிக அதிக மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் வடக்கு, வடமத்திய, மத்திய, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் கேகாலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

சில இடங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகளவான கனமழை பெய்யக்கூடும்.

ஏனைய பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.

சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழையும் பெய்யக்கூடும்.

வடக்கு, வடமத்திய, மத்திய, மேல், வடமேல், தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மணிக்கு 40-50 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

உள்ளூராட்சி தேர்தலின் முன்னர் தமிழ் தேசிய கட்சிகளுடன் இணக்கப்பாடு!

Pagetamil

மாதகலில் 128Kg கஞ்சா சிக்கியது!

Pagetamil

டிப்பரில் கஞ்சா கடத்தல்: சுட்டுப்பிடித்தது பொலிஸ்!

Pagetamil

ஊடகவியலாளர் கீத் நொயர் கடத்தல் விவகாரத்தில் முன்னாள் இராணுவப் புலனாய்வாளர்கள் இருவர் கைது!

Pagetamil

போதை மாத்திரைகளுடன் இருவர் கைது!

Pagetamil

Leave a Comment