மைத்திரியிடம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு வாக்குமூலம் பெற்றது!

Date:

வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (26) இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளார்.

ரோயல் பார்க் கொலை வழக்கின் குற்றவாளிக்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்காக பணம் பெற்றதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு நபர் ஒருவர் சமர்ப்பித்த மனு தொடர்பில் விசாரணை நடத்தவே அவர் இன்று இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

2005 ஆம் ஆண்டு இராஜகிரிய ரோயல் பார்க் வீட்டுத் தொகுதியில் யுவதி ஒருவரைக் கொன்ற குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட ஜூட் ஷமந்த ஜயமஹவுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

மரணதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிக்கு 2016 மே 17 அன்று மன்னிப்பு வழங்கப்பட்டதோடு, தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.

ஒக்டோபர் 30, 2019 அன்று, அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையிலிருந்து விடுவித்து மன்னிப்பு வழங்கினார்.

spot_imgspot_img

More like this
Related

கரூரில் 31 பேருக்கு அரசுப் பணி வழங்கிய அரசாணை ரத்து: உயர் நீதிமன்றம் அதிரடி

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களில் 31 பேரின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி...

பேராசிரியர் ரகுராம் வழக்கில் இடைக்கால கட்டளை நீடிப்பு

பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புவதற்கு எதிராக...

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பரிபாலனசபைக்கு இடைக்கால தடைவிதித்தது நீதிமன்றம்

வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் பரிபாலன சபையின் செயற்பாடுகளுக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்