இனி தனித்து தேர்தல்களில் போட்டியிடுவதில்லை: விக்னேஸ்வரன் அணி தீர்மானம்!

Date:

எதிர்வரும் தேர்தல்களில் தனித்து போட்டியிடுவதால் எந்த பலனுமில்லை, இனி கூட்டணியாகவே தேர்தல்களை சந்திக்க வேண்டுமென, தமிழ் மக்கள் கூட்டணி தீர்மானம் எடுத்துள்ளது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரும், கட்சியின் செயலாளர் க.வி.விக்னேஸ்வரனுடன் நடத்திய கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தனித்து போட்யிட்டு பலனில்லை, இனிமேல் கூட்டணியாகவே தேர்தலை எதிர்கொள்ள வேண்டுமென வேட்பாளர்கள் அனைவரும் தெரிவித்தனர். விக்னேஸ்வரனும் அதனை ஏற்றுக்கொண்டார்.

கடந்த தேர்தலில் தமிழ் மக்கள் கூட்டணி வெற்றியடையாமல் போனதற்கு, க.வி.விக்னேஸ்வரன் மதுபானச்சாலை அனுமதிக்கு உதவிய விவகாரமே காரணம் என வேட்பாளர்கள் அனைவரும் தெரிவித்துள்ளனர். தாம் பிரச்சாரத்துக்கு செல்லும் இடமெல்லாம் மதுபானச்சாலை அனுமதிக்கு உதவிய விவகாரத்தில் எதிர்ப்பை சந்தித்ததாக வேட்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தான் வாழ்வாதார உதவியாக அதனை செய்ததாக ஊடகங்களில் செய்தி வெளியானதாகவும், ஆனால்- வாழ்வாதார உதவியாக மதுபானச்சாலை சிபாரிசு கடிதம் வழங்கியதாக யாரிடமும் சொல்லவில்லையென்றும், ஊடகங்கள் அதை திரித்து அவ்வாறு வெளியிட்டு விட்டதாகவும் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

ஐநூறு போதை மாத்திரைகளுடன் சிஜடியினரால் யாழில் இருவர் கைது

யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்,...

செம்மணி புதைகுழி விவகாரம்: ராஜ் சோமதேவவின் விளக்கங்கள் குறித்து சுயாதீன ஆய்வு கோரும் அமெரிக்கத் தமிழர் அமைப்பு!

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழிகள் தொடர்பாகப் பேராசிரியர் ராஜ் சோமதேவ முன்வைத்துள்ள...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்