26 C
Jaffna
December 10, 2024
Pagetamil
இலங்கை

நீதிமன்ற பிடியாணையை தொடர்ந்து அர்ச்சுனா எடுத்த விபரீத முடிவு: அதுவும் கைகொடுக்கவில்லை!

தற்குறித்தனத்தால் பரவலான விமர்சனத்தை சம்பாதித்து வரும் வைத்தியர் அர்ச்சுனா, நீதிமன்ற பிடியாணையை தொடர்ந்து பெரதேனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

மன்னார் வைத்தியசாலைக்குள் புகுந்து அட்டகாசம் செய்து, முறையற்ற விதமாக நடந்து கொண்ட அர்ச்சுனா, மன்னார் பொலிசாரால் கைது செய்யப்பட்டிருந்தார். விளக்கமறியலில் வைக்கப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

அவரும், அவரையொத்த சிலரும் இணைந்து, சுயேச்சைக்குழுவாக தேர்தலிலும் களமிறங்கியுள்ளனர். இதுவரை மக்கள் நல செயற்பாடு எதிலும் கலந்து கொண்டிருக்காத அவர்கள், இப்பொழுது திடீரென ஏனைய அரசியல்தரப்பினரை விமர்சிக்கும் வினோத காட்சிகளும் இடம்பெற்று வருகின்றன.

இதற்குள், அந்த தரப்புக்குள் வைத்தியர் அர்ச்சுனாவின் புதிய காதல் விவகாரமும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அர்ச்சுனாவுக்கும், இளம் பெண் சட்டத்தரணிக்கும் காதல் மலர்ந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவலாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. அந்த சட்டத்தரணியின் காதலன் எனப்படும் இளைஞரின் கண்ணீர் ஓடியோக்களும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

இந்த குழுவுக்குள் பணப்பங்கீட்டில் மோதல் ஏற்பட்டுள்ளதாகவும், அதனாலேயே அந்த தரப்பில் ஏட்டிக்குப்போட்டியான பகிரங்க கருத்துக்கள் வெளிப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த பின்னணியில், மன்னார் வைத்தியசாலைக்குள் அடாவடியில் ஈடுபட்ட விவகாரத்தில், மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலையாகாத அர்ச்சுனாவுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. வைத்தியர் சார்பில் முன்னிலையாகியிருந்த பெண் சட்டத்தரணி, வைத்தியர் மனஅழுத்தத்தில் இருப்பதாகவும், தேர்தல் பரபரப்பில் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

அவர் மன்னார் நீதிமன்றத்தில் இதை சொல்லிக் கொண்டிருந்த போது, அதற்கு சற்று முன்னர்தான், வைத்தியர் தனது பேஸ்புக்கில் வழக்கம் போல ஏதோ சவடால் பதிவிட்டுள்ளார்.

அதை, எதிர்தரப்பு சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியபோது, அர்ச்சுனாவுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த தகவல் உடனடியாகவே அர்ச்சுனாவுக்கு தெரிவிக்கப்பட, அவர் தனது பேஸ்புக் பக்கத்தை செயலிழக்கச் செய்தார்.

அத்துடன், யாழ்ப்பாணத்திலிருந்து தனது வாகனத்தை செலுத்திக் கொண்டு பெரதேனியா புறப்பட்டவர், அன்றிரவே பெரதேனியா வைத்தியசாலையில், தனக்கு சுகவீனமென குறிப்பிட்டு அனுமதியானார்.

அவரை பரிசோதித்த வைத்தியர்கள், மறுநாள் காலையிலேயே அவரை அங்கிருந்து வெளியேற்றி விட்டனர்.

மன்னார் நீதிமன்ற பிடியாணையை தொடர்ந்து, அர்ச்சுனா இந்த நடவடிக்கையில் ஈடுபட்டாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
5
+1
1
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

பொலிஸ் சோதனைச்சாவடிகள் அகற்றப்பட்டதால் விபரீதமா?: அல்லைப்பிட்டியில் பெண்களுக்கு நேர்ந்த கதி!

Pagetamil

பேரன் பகிடியாக தள்ளியதால் 91 வயது மூதாட்டி உயிரிழப்பு: யாழில் சம்பவம்!

Pagetamil

கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலக செயலாளராக ஜெ. எஸ் அருள்ராஜ்

east pagetamil

கிளாலி மக்களுக்கான குடிநீர் இணைப்புக்கான நடமாடும் சேவை

Pagetamil

லொஹான் ரத்வத்த பிணையில் விடுதலை

Pagetamil

Leave a Comment