சுவிசிலிருந்து கட்டுநாயக்கவிற்கு நேரடி விமான சேவை

Date:

குளிர்கால வருகையையொட்டி சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் இருந்து புதிய விமானம் ஒன்று இன்று (01) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

எடெல்வீஸ் ஏர்லைன்ஸ் ஏர்பஸ் ஏ 330 வகை விமானமே இலங்கையை வந்தடைந்தது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நீர் வணக்கம் செலுத்தப்பட்டது.

இன்று காலை 09.20 மணியளவில் Edlewise Airlines இன் W.K.-68 என்ற இந்த விமானத்தில் 17 வணிக வகுப்பு பயணிகளும் 221 பொருளாதார வகுப்பு பயணிகளும் இதர 13 பணியாளர்களும் என 251 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

வாரத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சூரிச்சில் இருந்து புறப்பட்டு, நேரடியாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையும் இந்த விமானம், அன்றைய தினம் காலை 10.05 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து மாலை 10.05 மணிக்கு  மாலைதீவு வழியாக சூரிச்சுக்குத் திரும்புவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த விமானங்கள் 2025 ஜனவரி முதல் வாரத்தில் இரண்டு நாட்கள் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சூரிச்சிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குளிர்கால விமான சேவையின் விமானங்கள் 2025 மே மாதம் வரை இயக்கப்படும்.

spot_imgspot_img

More like this
Related

அச்சினி இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்

அருணா விதனகமகே (என்கிற கஜ்ஜா’) மற்றும் அவரது இரு பிள்ளைகள் படுகொலை...

ஏறாவூர் தன்னாமுனை யில் ஒரு வயது குழந்தை தண்ணீர் வாளியில் தவறி விழுந்து உயிரிழப்பு-

20 லீற்றர் கொண்ட தண்ணீர் வாளியில் விழுந்து ஒரு வயது ஆண்...

மீண்டும் தயாராகும் ஹிஸ்புல்லா

ஈரானிடமிருந்து பண உதவியைப் பெற்ற பிறகு, லெபனான் ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லா,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்