இன்று தபால்மூல வாக்களிப்பு

Date:

2024 பாராளுமன்றத் தேர்தலுக்கான அரச  ஊழியர்களின் தபால் மூல வாக்களிப்பு இன்று (30) இடம்பெறவுள்ளது.

பொலிஸ் மற்றும் மாவட்ட செயலக அலுவலகங்கள், தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகங்கள் மற்றும் பொலிஸ் மா அதிபர் அலுவலகம் ஆகியவற்றில் பணியாற்றும் பொலிஸாருக்கு இன்று (30) அல்லது நவம்பர் 4 ஆம் திகதி தபால் மூலம் வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

முப்படையினருக்கும் ஏனைய அரச நிறுவனங்களுக்கும் நவம்பர் 1 அல்லது 4 ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறித்த நாட்களில் தபால் மூலம் வாக்களிக்க முடியாத அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு நவம்பர் 07 அல்லது 08 ஆம் திகதிகளில் அந்தந்த மாவட்டத்தில் உள்ள மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பின் மூலம் வாக்களிக்க 7,59,210 தபால்மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், மொத்தம் 738,050 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். மொத்தம் 21,160 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. அண்மையில் முடிவடைந்த ஜனாதிபதி தேர்தலுடன் ஒப்பிடுகையில் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் 25,731 அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் 8,821 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் இடது கையில் சுண்டு விரலுக்குப் பதிலாக இடது கையின் ஆள்காட்டி விரலில் மை அடையாளம் குறிக்கப்படும் என  தெரிவித்துள்ளார். இடது கையில் ஆள்காட்டி விரல் இல்லாத எந்த வாக்காளரின் கட்டை விரலிலோ அல்லது வலது கையில் வேறு ஏதேனும் ஒரு விரலிலோ குறிக்கப்படும்.

2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 21 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலிலி, வாக்காளர்களின்  இடது கையின் சுண்டு விரலில் மை அடையாளமிடப்பட்டிருந்தது. ஒக்டோபர் 26 ஆம் திகதி இடம்பெற்ற எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் இடது கையின் கட்டை விரலில் மை அடையாளமிடப்பட்டிருந்தது. இதனால் ஏற்படக்கூடிய சிக்கல்களைத் தவிர்ப்பதற்காக , 1981 ஆம் ஆண்டின் நாடாளுமன்றத் தேர்தல்கள் சட்டம் 1 இன் பிரிவு 38(3)(b) இன் படி தேர்தல் ஆணைக்குழுவால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மத்தியகுழு கூட்டத்தில் வெடித்த சுமந்திரன்- சிறிதரன் மோதல்

இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் வழக்கம் போல பெரும்...

கள்ளக்காதலனுடன் இணைந்து தாயைக் கொன்ற மகள்

திரப்பனை நகர எல்லைக்குட்பட்ட அத்துங்கம சந்திப்புக்கு அருகே உள்ள ஒரு வீட்டில்...

சிறிதரன் விவகாரத்தை ஆராய 3 பேர் கொண்ட குழு

பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தொடர்பாக முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளை ஆராய்வதற்காக அவரது இணக்கப்பாட்டுடன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்