“விஜய் ரசிகர்களில் பாதி பேர் எனக்கே வாக்களிப்பர்” – சீமான் நம்பிக்கை

Date:

“விஜய் வருகையால் எனது வாக்குகள் குறையாது. அவரது ரசிகர்களில் பாதி பேர் எனக்குத்தான் வாக்களிப்பார்கள்” என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுடனான கலந்தாய்வு கூட்டம் இன்று தேனி அருகே மதுராபுரியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் கூறியது: ”தமிழகத்தில் உள்ள பகுதிநேர ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊதியம் வழங்காமல், வெறுமனே தீபாவளி வாழ்த்துகள் மட்டும் கூறுவது ஏற்புடையதல்ல. எங்களைப் பொறுத்தவரை பாஜக தேவையில்லாத கட்சி. நீட், ஜிஎஸ்டி. உள்ளிட்ட மக்கள் விரோத திட்டங்களை கொண்டு வந்தது காங்கிரஸ் ஆட்சியில் தான். அதற்கு துணையாக இருந்தது திமுக. என் இனத்தின் எதிரி காங்கிரஸ்.

பொதுவாக ஒரு நடிகரை பார்க்க வந்த கூட்டம் எல்லாம் வாக்குகளாக மாறாது. கூட்டணியில் இருப்பவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கொள்கை விஜய்யின் பெருந்தன்மை. அதனை ஏற்று அவரது கூட்டணியில் இணைவது அவரவரது விருப்பம். எங்களைப் பொறுத்தவரை யாருடனும் கூட்டணி கிடையாது; நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும். விஜய்யின் அரசியல் வருகையால் எனது வாக்குகள் குறையாது. ஏனென்றால், விஜய்யின் ரசிகர்களில் பாதி பேர் எனக்குத்தான் வாக்களிப்பார்கள்” என்று அவர் கூறினார்.

spot_imgspot_img

More like this
Related

மரத்தில் கட்டிவைக்கப்பட்ட இளைஞன் பொலிஸ் காவலில் உயிரிழந்த சர்ச்சை சம்பவம்!

கொபெய்கனே  பொலிஸாரின் காவலில் இருந்த சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக,...

மேய்ச்சல் தரை விவகாரம்: மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் முன் போராட்டம்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் பாரம்பரியமான மயிலத்தமடு மற்றும் மாதவனை மேய்ச்சல் தரைகளை சட்டவிரோத...

ஐ.ம.ச, ஐ.தே.க கூட்டும் வெற்றி பெறுவது சிரமம்!

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி இடையிலான கூட்டணி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்