முல்லைத்தீவு – முத்துஐயன்கட்டு கிராமத்திற்குள் காட்டு யானை தாக்கியதில் இளைஞன் பலியானார்.
முல்லைத்தீவு – முத்துவிநாயகபுரம் முத்துஐயன்கட்டு பகுதியினை சேர்ந்த 23 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவரின் உடல் பிரதேச மக்களால் மீட்கப்பட்டு ஒட்டுசுட்டான் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்று நாட்களாக குறித்த யானை விவசாயிகளின் மக்கள் குடியிருப்பு பகுதியில் நின்று அட்டகாசம் செய்து வருவதால் மக்கள் அச்சத்துடன் காணப்படுகின்றார்கள்.
வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு நேரத்திற்கு அறிவித்தும் உடன் நடவடிக்கை எடுக்காததால் ஒரு உயிர் பிரிந்துள்ளதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1