26.8 C
Jaffna
January 19, 2025
Pagetamil
இலங்கை

கொழும்பு- காங்கேசன்துறை புகையிரத சேவை இன்று மீள ஆரம்பம்!

மஹவ மற்றும் அனுராதபுரம் வரையான புகையிரதப் பாதை புனரமைக்கப்பட்டதன் பின்னர் கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன் துறை வரையான புகையிரத சேவை இன்று (28) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பிரதி புகையிரதப் பொது முகாமையாளர் (போக்குவரத்து) என்.ஜே. இந்திபொலகே விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் தினமும் வடக்கு புகையிரதப் பாதையில் புகையிரதம் பயணிக்கும் என்றும், புகையிரதக் கடவைகளைப் பயன்படுத்தும் பொதுமக்கள் மிகவும் அவதானமாக செயல்படுமாறும் புகையிரதத் திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அந்தப் புகையிரத நேர அட்டவணைக்கு அமைய,

* கொழும்பு கோட்டையில் இருந்து காலை 6.05 க்கு புறப்படும் புகையிரதம் பிற்பகல் 12.38 க்கு திருகோணமலையை சென்றடையும்.

* பிற்பகல் 1.30 க்கு திருகோணமலையில் இருந்து புறப்படும் புகையிரதம் இரவு 7.59 க்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தை வந்தடையும்.

* கொழும்பு கோட்டையில் இருந்து காலை 6.05 க்கு புறப்படும் புகையிரதம் பிற்பகல் 3.15 க்கு மட்டக்களப்பை சென்றடையும்.

* கொழும்பு கோட்டையில் இருந்து பிற்பகல் 3.15 க்கு புறப்படும் புகையிரதம் இரவு 10.22 க்கு மட்டக்களப்பை சென்றடையும்.

* மட்டக்களப்பில் இருந்து பிற்பகல் 1.40 புறப்படும் புகையிரதம் இரவு 8.55 க்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தை வந்தடையும்.

* மட்டக்களப்பில் இருந்து இரவு 6.10 க்கு புறப்படும் புகையிரதம் இரவு 8.55 க்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தை வந்தடையும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இரு பேருந்துகள் மோதி விபத்து: 35 பேர் காயம்!

Pagetamil

மன்னார் துப்பாக்கிச்சூடு: முன்னாள் இராணுவச்சிப்பாய்கள் இருவர் சந்தேகத்தில் கைது!

Pagetamil

அரிய நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனை காக்க நன்கொடை கோரும் பெற்றோர்

east tamil

யாழ் நகைக்கடை கொள்ளை: இரணுவப் புலனாய்வளர்கள், காப்புறுதி நிறுவன முகாமையாளர்கள் கைது!

Pagetamil

இன்றைய வானிலை அறிக்கை

east tamil

Leave a Comment