லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் ரோஹித போகொல்லாகமவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வீட்டுப் பணிப்பெண் ஒருவர் துன்புறுத்தப்பட்டதாக கூறப்படும் முறைப்பாடு தொடர்பில் இங்கிலாந்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
வீட்டில் சமையல்காரராக இருக்கும் வீட்டு உதவியாளர், அவரது நண்பர் ஒருவர் மூலம் அவசர தொடர்பு தொலைபேசியில் பொலிஸில் புகார் செய்தார்.
வீட்டுக்குள் ஒருவர் தற்கொலைக்கு முயற்சிப்பதாக வந்த புகாரின் பேரில் பொலிசார் வீட்டுக்கு வந்து விசாரணை நடத்தினர்.
ஆனால், எந்த சட்ட நடவடிக்கையும் தொடங்கப்படவில்லை.
இராஜதந்திர விலக்கு காரணமாக பொலிசார் வீட்டிற்குள் நுழையவில்லை என்று இராஜதந்திர வட்டாரம் தெரிவித்துள்ளது.
பின்னர், அவசர கடவுச்சீட்டைப் பயன்படுத்தி வீட்டுப் பணிப்பெண் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டார்.
இவருக்கு முன்னர் பிரித்தானிய தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் பணிபுரிந்த நபரும் போகொல்லாகம குடும்பத்தாரின் மரண அச்சுறுத்தல் காரணமாக வீட்டை விட்டு ஓடி பிரித்தானியாவில் தஞ்சம் புகுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.