யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு குடாரப்பு பகுதியில் தனித்திருந்த 10 வயதுச் சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்க முயன்ற 60 வயது முதியவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மருதங்கேணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குடாரப்பு பகுதியில் நேற்று முன்தினம் தினம் (23) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சிறுமியின் தாய்க்கு 2 மாதங்களின் முன்னர் குழந்தை பிரசவமாகியுள்ளது. தாயார் நாவல் பழம் கொடுப்பதற்காக வெளியே சென்றிருந்த நிலையில், 2 மாத தங்கையை கவனித்துக் கொண்டிருந்துள்ளார்.
அவரது வீட்டுக்கு பின் வீட்டில் வசிக்கும் 60 வயது முதியவர் ஒருவர், திடீரென வீட்டுக்குள் நுழைந்து, சிறுமியை வல்லுறவுக்குள்ளாக்க முயன்றுள்ளார். சிறுமி அவரை தாக்கி, கூச்சலிட்டுள்ளார்.
சிறுமி சத்தமிட்டதையடுத்து முதியவர் தப்பியோடியுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோருக்கு தெரியப்படுத்திய நிலையில் மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
இச்சம்பவத்தை அடுத்து சந்தேக நபரான குறித்த முதியவர் தலைமறைவாகினார்.
நேற்று, முதியவர் மருதங்கேணி பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.
குறித்த சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மருத்துவ பரிசோதனை இடம்பெற்றது. இதில், சிறுமி துஸ்பிரயோகத்துக்கு உள்ளானது தெரிய வந்தது.