இன்று (23ம் திகதி) முதல் நவம்பர் 14ம் திகதி வரை அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறையும் இரத்து செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பாராளுமன்ற தேர்தல் தபால் மூல வாக்குகள் அடங்கிய முன்பதிவு செய்யப்பட்ட பொதிகள் இன்று தபால் நிலையத்திற்கு வழங்கப்படவுள்ளன.
அவர்களைப் பெற்றுக் கொள்வதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்தார்.




