மாகாண ஆளுனர்களுக்கு ஜனாதிபதி விடுத்த பணிப்புரை

Date:

மாகாண சபை பொறிமுறையை உருவாக்குவதற்கான முன்மொழிவை உருவாக்கி சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மாகாண ஆளுநர்களுக்கு அறிவித்தார். மாகாண ஆளுநர்களுடன் நேற்று (22) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

ஆளுநர்களுக்கு அறிவிக்கப்பட்டதுடன், தற்போதைய நிலைமாறு காலத்தில் மக்களின் வாழ்க்கைத் தரத்தை எளிதாக்குவதற்கு மாகாண சபைகளால் இயன்ற சிறந்த சேவையை வழங்குமாறும் ஜனதிபதியால் தெரிவிக்கப்பட்டது.

மாகாண சபைகளின் கீழ் உள்ள சுகாதார மற்றும் கல்வி சேவைகளில் உள்ள வெற்றிடங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், சாதகமான தீர்வுகளை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டது. நிலைமாறும் காலத்தில் மக்களின் வாழ்க்கை நிலைமையை இலகுபடுத்துவதற்கு மாகாண சபைகள் சிறந்த சேவையை வழங்கும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். மக்களின் வாழ்க்கையை இலகுவாக்கும் வகையில் மாகாண சபைகளில் சாத்தியமான அனைத்து பொருளாதார மற்றும் சமூக தலையீடுகளையும் மேற்கொள்ளுமாறு மாகாண ஆளுநர்களுக்கு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி, புதிய அரசியல் கலாசாரத்தை ஆரம்பிப்பதற்கு கிடைத்த ஆணை பற்றியும் நினைவுபடுத்தினார்.

மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு பங்கம் ஏற்படாத வகையில் செயற்படுமாறும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

அரசாங்க சொத்துக்களை பயன்படுத்துவதில் முன்னைய மோசமான முன்னுதாரணங்களை அகற்றி தரமான அரச சேவைக்கு தம்மை அர்ப்பணிக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க ஆளுநர்களுக்கு தெரிவித்துள்ளார். இதன்போது வடகிழக்கு மாகாணங்களில் உள்ள காணிகள் மற்றும் மாகாண சபையின் பணப்பயன்பாடு தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன், கந்தளே விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட காணி தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்ப ஜானகி ராஜரத்ன, கிழக்கு மாகாண ஆளுநர் ஜெயந்த் லால் ரத்னசேகர, ஊவா மாகாண ஆளுநர் கபிலா ஜயசேகர, தென் மாகாண ஆளுநர் பந்துல ஹரிச்சந்திர, மத்திய மாகாண ஆளுநர் சரத் பண்டார சமரசிங்க அபயகோன், வட மத்திய மாகாண ஆளுநர் வசந்தகுமார விமலசிறி ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

spot_imgspot_img

More like this
Related

யாழில் பட்டாசு வெடித்து இளைஞன் பலி

யாழ்ப்பாணம் குருநகர் 5 மாடி குடியிருப்பு பகுதியில் இன்று (02) அதிகாலை...

இளைஞர் உயிரிழப்பு பட்டாசு வெடித்து

பட்டாசு வெடித்து இளைஞர் உயிரிழப்பு – யாழ்ப்பாணத்தில் துயரச் சம்பவம் யாழ்ப்பாணம் குருநகர்...

யாழில் 18 வயதான இரட்டை சகோதரிகள் தீமூட்டி உயிர்மாய்த்தனர்!

யாழ்ப்பாணம், ஏழாலை பகுதியில் தமக்கு தாமே தீமூட்டி 18 வயதான இரட்டை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்