மீண்டும் முட்டை விலையை உயர்த்தி அரசாங்கத்தை அவமதிக்கும் முயற்சி இடம்பெற்று வருவதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன கூறுகிறார். இவ்விடயத்தில் அரசாங்கம் உடனடியாக தலையிட வேண்டும் என வலியுறுத்திய அவர், நாட்டில் தற்போது முட்டை மாபியா செயற்படுவதாகவும் தெரிவித்தார்.
கடந்த வாரம் முட்டையின் விலை குறைவடைந்ததன் காரணமாக தாம் உற்பத்தி செய்யும் பொருட்களின் விலையை குறைத்ததாகவும், தற்போது கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சந்தையில் முட்டையின் விலை 45 ரூபாவை எட்டியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1