பொலிஸ் உத்தியோகத்தரின் வீட்டில் திருடியவர் கைது

Date:

யாழ்ப்பாணம் – நவாலி பகுதியில் உள்ள பொலிஸ் உத்தியோகத்தரது வீட்டில் நகைகள் மற்றும் ஒரு தொகை பணம் என்பன களவாடிய சம்பவம் தொடர்பாக சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு நேற்றையதினம் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை கைது செய்து குறித்த நபரிடம் இருந்து மூன்றரைப் பவுண் நகையை யாழ்ப்பாண பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மீட்டனர்.

கடந்த வாரம் வீட்டின் குளியலறை ஊடாக உள்நுழைந்த திருடர்கள், ஆறரை பவுண் நகை மற்றும் 29 ஆயிரம் ரூபா பணம் என்பவற்றை திருடிச் சென்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சந்தேக நபரை கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்தினர.

பிரதான சந்தேக நபரை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

பொலிஸ் மா அதிபரினால் பொறுப்பதிகாரியின் உத்தியோகப்பூர்வ இல்லம் திறந்து வைப்பு

அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள மஹாஓயா பொலிஸ் நிலையத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பொலிஸ்...

போக்குவரத்து பொலிஸாரை மோட்டார் சைக்கிளால் மோதிவிட்டு தப்பிச் செல்ல முயற்சி- இரு இளைஞர்களுக்கு 14 நாட்கள் விளக்கமறியல் விதிப்பு

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்துப்...

புளோரிடாவில் விமானம் விபத்து: வானிலேயே உடைந்து சிதறிய பாகங்கள்!

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் 9 பேருடன் பயணித்த தனியார் விமானம் விபத்துக்குள்ளானதில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்