மட்டு புதூரில் இயங்கிவரும் கஜன் மற்றும் குண்டன் தலைமையிலான ரவுடிக் குழுவினர் தொடர்பாக தகவல் தெரிந்தால் பொலிசாருக்கு அறிவிக்கவும்

Date:

மட்டக்களப்பு புதூர் பகுதியில் இயங்கி வரும் 7 பேர் கொண்ட  கஜன் மற்றும் குண்டன் தலைமையிலான ரவுடிக் குழுவினரின் தாக்குதலுக்கு எங்கள் மகன் உள்ளாகி பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் உயிருக்காக போராடி வருகிறார். இந்த தாக்குதலை மேற்கொண்ட ரவுடி குழுவினர் தலை மறைவாகியுள்ளனர் எனவே இவர்களுக்கு யாரும் உதவ வேண்டாம் அதேவேளை இவர்கள் பற்றிய தகவல் தெரிந்தவர்கள்; உடன் அருகிலுள்ள  பொலிஸ் நிலையத்திற்கு தெரியப்படுத்துமாறு பாதிக்கப்பட்டவரின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு பொய்ஸ் ஒப் மீடியாவில் இன்று புதன்கிழமை (4) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர்கள் இவ்வாறு கோரிக்கை விடுத்தனர்.

சம்பவ தினமான கடந்த மாதம் 26 ம் திகதி சேத்துக்குடா பிரதேசத்தில் இருந்து புத்தூருக்கு தனது மகன் சென்ற வேளை  கஜன் மற்றும்  குண்டன் தலைமையிலான ரவுடிக் கும்பல் மகனிடம் பணம் கேட்ட நிலையில் ஏற்பட்ட வாக்குவாதத்தையடுத்து மகன் மீது ரவுடி கும்பல் பலத்த தாக்குதல் நடத்தியதில் அவர் இதயம் பாதிக்கப்பட்டு  படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை தாக்குதலை நடத்திய ரவுடிக் கும்பல் தலைமறைவாகிய நிலையில் அவர்களில் 3 பேரை பொலிசார் கைது செய்து ஒருவர் பிணையில் விடுவித்ததோடு இருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் இந்த குழுவின் பிரதான சூத்திரதாரிகளான கஜன், குண்டன் உட்பட்ட 4 பேர் தலைமறைவாகியுள்ளனர். இவர்கள் இந்த பிரதேசத்தில் வீதியால் செல்பவர்களை வழிமறித்து கப்பம் கோருவது கொடுக்க மறுப்பவர்களை தாக்குவது போன்ற அடாவடியில் ஈடுபட்டு வருகின்ற இந்த கும்பலை பொலிசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

எனவே இவர்கள் தொடர்பாக தகவல் தெரிந்தால் உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறும் இன்று எனது மகனுக்கு நடந்தது போல நாளை உங்கள் குடும்பத்தில் நடந்தால் என்ன செய்வீர்களே அதே மாதிரி நினைத்து எங்களுக்கு உதவி செய்யுமாறு பாதிக்கப்பட்டோரின் பெற்றோர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

கொழும்பு தேசிய வைத்தியசாலை இயல்புக்கு திரும்பியது!

கொழும்பு தேசிய மருத்துவமனையில், பலத்த மழையினால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கின் காரணமாகச்...

முன்னாள் காதலி இப்போது என்ன செய்கிறாள்? – தகவல் அறியும் சட்டத்தில் 1,886 கேள்விகள் கேட்ட இளைஞர்

விழுப்புரம் மாவட்​டத்​தைச் சேர்ந்த சந்​தோஷ் (22) என்​பவர், கடந்த 2021-2024 ஆண்​டுகளில்...

பட்டினியால் இறந்து சொர்க்கம் செல்லலாமென கூறி 190 பேரை கொன்ற மதகுருவுக்கு 200 வருட சிறை

கென்யாவின் ஷாகஹோலா வனப்பகுதியில் பட்டினி கிடந்து உயிரிழக்கத் தூண்டிய மதக் குழுவின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்