சிறிய உலக முடிவிடத்தில் வீசப்பட்ட முச்சக்கர வண்டி சாரதியின் சடலம் மீட்பு!

Date:

மடுல்சீமை, சிறிய உலக முடிவிடத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட நிலையில், ஹாலிஎல ரொசெட்வத்தை பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய முச்சக்கர வண்டி சாரதியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சுமார் 500 அடி உயர குன்றின் கீழே விழுந்து பதினாறு நாட்களுக்குப் பின்னர் இன்று (16) பிற்பகல் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக மடுல்சீம பொலிஸார் தெரிவித்தனர்.

வெல்லவாய குடா ஓயா இராணுவ கொமாண்டோக்கள் கயிற்றின் உதவியுடன் சிறிய உலக முடிவிடத்தில் இறங்கி சடலத்தை தேடினர். மீட்கப்பட்ட சடலம் இன்று மதியம் 2 மணியளவில் மேலே கொண்டு வரப்பட்டது.

சடலம் கண்டெடுக்கப்பட்டபோது, ​​அது மிகவும் சிதைந்து துர்நாற்றம் வீசியதாகவும், உடலின் அடிப்பகுதியில் காற்சட்டை கழன்றிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹாலியெல, ரொசெட்வத்தையில் வசிக்கும் விவேகானந்தன் சுஜீவன் (23) என்ற திருமணமாகாத முச்சக்கர வண்டி சாரதியே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

படவத்த பகுதியில் உள்ள ஒருவரிடமிருந்து முச்சக்கரவண்டி ஒன்றை வாங்கிய அவர், அவருக்கு சில ரத்தினங்கள் மற்றும் தங்கத்தை விற்கப் போவதாக அந்த நபர் கூறியுள்ளார்.

முச்சக்கரவண்டி சாரதி, சிறிய உலக முடிவிடத்துக்கு அருகில் உள்ள காட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெறுமதியான கற்கள் மற்றும் தங்கம் என்பனவற்றை காண்பிப்பதாக தெரிவித்து, அதிகாலையில் அழைத்துச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அங்கு பிரதான சந்தேக நபர் மீண்டும் வாங்கிய முச்சக்கரவண்டியை அவரிடம் கேட்டு வாக்குவாதம் முற்றிய நிலையில் இருவரும் இணைந்து முச்சக்கரவண்டி சாரதியை இரும்பு ஆயுதத்தால் தாக்கி, எட்டி உதைத்து சிறிய உலக முடிவிடத்தில் விழுத்தி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பல நாட்களாகியும் மகன் வீட்டிற்கு வராததால் தந்தை இது குறித்து ஹலிலெல பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இக்கொலையின் பிரதான சந்தேக நபரான 34 வயதுடைய சந்தேக நபரான ஹலிலெல குயின்ஸ்டவுன்வத்தையைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இவரிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், மற்றைய சந்தேக நபரான மடுல்சீமை படவத்தையில் வசிக்கும் 24 வயதுடைய வாகன தரகர் ஹாலிஎல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சாரதியை கொலை செய்த பின்னர், முச்சக்கரவண்டியை பதுளையில் உள்ள தனியார் நிதி நிறுவனமொன்றுக்கு விற்பனை செய்துள்ளது தெரிய வந்தது. முச்சக்கர வண்டி மீட்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

ஏறாவூர் தன்னாமுனை யில் ஒரு வயது குழந்தை தண்ணீர் வாளியில் தவறி விழுந்து உயிரிழப்பு-

20 லீற்றர் கொண்ட தண்ணீர் வாளியில் விழுந்து ஒரு வயது ஆண்...

மீண்டும் தயாராகும் ஹிஸ்புல்லா

ஈரானிடமிருந்து பண உதவியைப் பெற்ற பிறகு, லெபனான் ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லா,...

நாளை பாடசாலைகளுக்கு விடுமுறை

தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (27)...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்