யாழ்ப்பாணம் கிளிநொச்சி தேர்தல் மாவட்டங்களுக்கான ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பு மனுத்தாக்கல் நாளை வெள்ளிக் கிழமை இடம்பெறவுள்ளது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தலைமையில் இவ் வேட்பு மனுத்தாக்கல் இடம்பெறவுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியுடன் சமத்துவக் கட்சி கூட்டணியாக 2024 பாராளுமன்ற பொது தேர்தலில் போட்டியிடவுள்ளது. இதனடிப்படையில் சமத்துவக் கட்சியின் சார்பில் நான்கு வேட்பாளர்களும், ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் ஐந்து வேட்பாளர்களும் இத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார் முதன்மை
வேட்பாளராகவும், இராசதுரை அந்தோனி ஆனந்தராஜா, துலேஜனா முகுந்தன், செல்வராசா தயாகுலன் ஆகியோர் சமததுவக் கட்சி சார்பாகவும் ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக ஐந்து பேரும் போட்டியிடுகின்றனர்.




