இலங்கை தமிழ் அரசு கட்சியிலிருந்து விலகுவதற்கு ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா முடிவு செய்துள்ளார்.
இது தொடர்பில் அவர் சற்று முன்னர் கட்சித் தலைமைக்கு எழுத்துமூலம் அறிவித்தல் விடுத்துள்ளார்.
தமிழ் அரசு கட்சியின் சார்பில் பொதுத்தேர்தலில் யாழ் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் விபரம் இன்று வெளியானது. இதில் கே.வி.தவராசா உள்ளிட்ட முக்கியஸ்தர்களுக்கு இடம்வழங்கப்படவில்லை. மாறாக எம்.ஏ.சுமந்திரனுக்கு ஆதரவாக பேஸ்புக்கில் பதிவிட்டவர்களுக்கும் இடம் வழங்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழ் அரசு கட்சியின் யாழ் மாவட்ட வேட்பாளர் பட்டியல் மிகமிகப் பலவீனமானதாக காணப்பட்டது.
கட்சிக்குள் தொடர்ந்தம் பழிவாங்கலுக்கு உள்ளாகி வந்த ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா கட்சியை விட்டு விலக முடிவு செய்துள்ளார்.