யாழில் விபச்சார சந்தேகத்தில் கைதான நடுத்தர வயது பெண்கள்!

Date:

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குழி பகுதியில் விபச்சாரம் நடைபெறுவதாக சந்தேகிக்கப்பட்ட வீடொன்று பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டதுடன் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

நாவற்குழி புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் சந்தேகத்திற்கிடமான வகையில் வீட்டில் இயங்கி வந்த விபச்சார விடுதியே இன்றைய தினம் யாழ் மாவட்ட குற்ற தடுப்பு பிரிவு பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டது.

இதன்போது 68 வயதான வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டதுடன் அளவெட்டி, குருநகர், கொடிகாமம் போன்ற பிரதேசங்களை சேர்ந்த மூன்று 40, 42, 53 வயது உடைய மூன்று பெண்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் கைதான நால்வரையும் சாவகச்சேரி பொலிஸார் ஊடாக சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

யாழில் பட்டாசு வெடித்து இளைஞன் பலி

யாழ்ப்பாணம் குருநகர் 5 மாடி குடியிருப்பு பகுதியில் இன்று (02) அதிகாலை...

இளைஞர் உயிரிழப்பு பட்டாசு வெடித்து

பட்டாசு வெடித்து இளைஞர் உயிரிழப்பு – யாழ்ப்பாணத்தில் துயரச் சம்பவம் யாழ்ப்பாணம் குருநகர்...

யாழில் 18 வயதான இரட்டை சகோதரிகள் தீமூட்டி உயிர்மாய்த்தனர்!

யாழ்ப்பாணம், ஏழாலை பகுதியில் தமக்கு தாமே தீமூட்டி 18 வயதான இரட்டை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்