கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் காணாமலாக்கப்பட்ட சம்பவம்: பிள்ளையான் கைதுக்கான காரணம் வெளியானது!

Date:

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அல்லது பிள்ளையான் கைது செய்யப்பட்டதற்கான காரணத்தை பொலிசார் வெளியிட்டுள்ளனர். ஒருவரை வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கிய வழக்கு தொடர்பாக பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் இராஜாங்க அமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான இவர், நேற்று மட்டக்களப்பில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

ஒருவர் கடத்தப்பட்டு பின்னர் காணாமல் போனது தொடர்பாக இந்த கைது மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2006 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர் காணாமல் போனது தொடர்பான விசாரணை தொடர்பாக பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று இரவு மட்டக்களப்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

மஹர சிறைக்கலவரத்தில் ஒருவர் பலி

சனிக்கிழமையன்று மஹர சிறையில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து, ஒரு கைதி உயிரிழந்ததாகவும்,...

பேச்சாளர் மகாவிஷ்ணுவை காதலிப்பதாக நடிகை மிருணாளினி ரவி தகவல்

ஆன்மிக பேச்சாளர் மகாவிஷ்ணுவை காதலிப்பதாக நடிகை மிருணாளினி ரவி தெரிவித்துள்ளார். இது குறித்து...

ஸ்​பெ​யினுக்​குள் ஊடுருவிய மொராக்கோ அகதிகள் உணவு இல்லாமல் மீண்டும் நாடு திரும்பினர்

ஸ்​பெ​யினுக்​குள் ஊடுரு​விய அகதி​கள் உணவு இல்​லாமல் மீண்​டும் சொந்த நாடான மொராக்​கோவுக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்