உழவு இயந்திரத்துடன் கனரக வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

Date:

உழவு இயந்திரத்துடன் கனரக வாகனம் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்முனை அம்பாறை பிரதான வீதியில் அமைந்துள்ள மல்வத்தை பள்ளிவாசலுக்கு அருகாமையில் கடந்த சனிக்கிழமை (05) மாலை இடம்பெற்றுளள்துடன் குறித்த விபத்தில் சம்மாந்துறை விளினியடி 03 பகுதியை சேர்ந்த அசனார் முகம்மட் இஸ்மாயில் (வயது 64) என்பவர் ஸ்தலத்தில் மரணமடைந்துள்ளார். அத்துடன் மற்றுமொருவர் காயமடைந்து நிலையில் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்தானது உழவு இயந்திரம் வயலை உழுது விட்டு வீடு திரும்பும் வழியில் இடம்பெற்றுள்ளதுடன் உழவு இயந்திரத்துடன் மோதிய கனரக வாகனத்தின் சாரதி சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விபத்தில் மரணமடைந்தவரின் சடலம் அம்பாறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

-பாறுக் ஷிஹான்-

spot_imgspot_img

More like this
Related

கொழும்பு தேசிய வைத்தியசாலை இயல்புக்கு திரும்பியது!

கொழும்பு தேசிய மருத்துவமனையில், பலத்த மழையினால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கின் காரணமாகச்...

முன்னாள் காதலி இப்போது என்ன செய்கிறாள்? – தகவல் அறியும் சட்டத்தில் 1,886 கேள்விகள் கேட்ட இளைஞர்

விழுப்புரம் மாவட்​டத்​தைச் சேர்ந்த சந்​தோஷ் (22) என்​பவர், கடந்த 2021-2024 ஆண்​டுகளில்...

பட்டினியால் இறந்து சொர்க்கம் செல்லலாமென கூறி 190 பேரை கொன்ற மதகுருவுக்கு 200 வருட சிறை

கென்யாவின் ஷாகஹோலா வனப்பகுதியில் பட்டினி கிடந்து உயிரிழக்கத் தூண்டிய மதக் குழுவின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்