அருந்தவபாலனின் நிபந்தனைகளை நிராகரித்த விக்னேஸ்வரன்!

Date:

தமிழ் மக்கள் கூட்டணியின் முதன்மை வேட்பாளராக தன்னை அறிவிக்க வேண்டுமென க.அருந்தவபாலன் விதித்த நிபந்தனையை ஏற்க முடியாதென, அந்த கட்சியின் பொதுச்செயலாளர் க.வி.விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் நேற்று (3) அருந்தவபாலனுக்கு மின்னஞ்சல் மூலம், தகவலளித்துள்ளார் க.வி.விக்னேஸ்வரன்.

அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்த க.அருந்தவபாலன், தான் இனிமேல் சிவில் செயற்பாட்டாளர் மட்டுமே என அறிவித்து, கூட்டங்களில் பேசி வந்தார். ஆனால், பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டதும், முன்னர் கூறியவற்றையெல்லாம் மறந்து, தேர்தலில் போட்டியிட தயாராகினார்.

யாழ்ப்பாண கட்டுரையாளர்களை நம்பி, அவர்களின் கூட்டணியில் போட்டியிட தயாராகியிருந்தார். ஆனால், அந்த குழு தேர்தலில் போட்டியிடப் போவதில்லையென அறிவித்தது.

இதை தொடர்ந்து, க.வி.விக்னேஸ்வரின் தமிழ் மக்கள் கூட்டணியில் போட்டியிட தயாராகினார். க.வி.விக்னேஸ்வரனுடன் சந்தித்து பேசிய அருந்தவபாலன், தன்னை கட்சியின் முதன்மை வேட்பாளராக நியமித்தால் போட்டியிட தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார்.

அத்துடன், மேலும் இரண்டு நிபந்தனைகளையும் விதித்திருந்தார்.

தனது தேர்தல் செலவை ஏற்க வேண்டும்,  யாழ் மாவட்ட வேட்பாளர்களாக தானும் சிலரை நியமிக்க வேண்டுமென கேட்டிருந்தார்.

ஆனால், க.வி.விக்னேஸ்வரன் இந்த நிபந்தனைகளை ஏற்கவில்லை.

நேற்று மின்னஞ்சல் மூலம் அருந்தவபாலனுக்கு தனது நிலைப்பாட்டை அறிவித்தார். கட்சியின் முதன்மை வேட்பாளர் என யாரும் அறிவிக்கப்பட மாட்டார்கள், வேட்பாளர்களை அதற்காக நியமிக்கப்பட்ட குழுவே தெரிவு செய்யும், தேர்தல் செலவுகளை வேட்பாளர்களே ஏற்க வேண்டுமென அந்த மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதன்மூலம், அருந்தவபாலனின் அரசியல் ஆசை மீண்டும் கருகியுள்ளதாக கருதப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

இலங்கையின் முன்னணி பதிப்பாளர் கொடகே காலமானார்

கோடகே பதிப்பகத்தின் நிறுவனர் தேசபந்து சிறிசுமன கொடகே நேற்று (29) காலமானார். அவர்...

எரான் விக்ரமரட்னவை கட்சியிலிருந்து விலகக்கோருகிறது ஐக்கிய மக்கள் சக்தி!

இலங்கை கிரிக்கெட்டின் உருமாற்றக் குழுவின் தலைவராக சமீபத்தில் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, முன்னாள்...

கடன் பணம் மாயம்: பாராளுமன்றத்தில் விளக்கமளிக்கவுள்ள ஜனாதிபதி

வியாழக்கிழமையன்று பொது நிதிக் குழுவின் (COPF) முன் ஆஜராகத் தன்னால் இயலாது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்