25.7 C
Jaffna
January 2, 2025
Pagetamil
கிழக்கு

2024 கிழக்கு மாகாண வருடாந்த ஆசிரியர் இடமாற்றங்கள் ரத்து

கிழக்கு மாகாண பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த ஆசிரியர் இடமாற்றங்களில் பல முறைகேடுகள் இருப்பதாகக் கூறி இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மற்றும் ஆசிரியர் சங்கத் தலைவர் ப்ரியந்த பெர்னாண்டோ உட்பட பாதிக்கப்பட்ட 14 ஆசிரியர்களினால் கல்முனை மாகாண மேல் நீதிமன்றத்தில் கட்டாணை மனு கடந்த மே மாதம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த ஆசிரியர் இடமாற்ற விடயங்களில் ஆசிரியர் இடமாற்ற சபை மற்றும் ஆசிரியர் இடமாற்ற மேன்முறையீட்டு சபை ஆகியன சரியாகக் கட்டமைக்கப்படவில்லை என்றும் கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றக் கொள்கைக்கு முரணாக ஆசிரியர் இடமாற்றங்கள் இடம் பெற்றிருப்பதாகவும் கூறி தங்களது இடமாற்றங்களை ரத்து செய்யக் கோரியும் தங்களது மனுவில் சுட்டிக்காட்டி இருந்தனர்.

இன்று ( 03) வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது பிரதிவாதிகள் சார்பில் தோன்றிய கிழக்கு மாகாண சபை சட்டத்தரணிகள் பாதிக்கப்பட்ட அனைத்து மனுதாரர்களினதும் இடமாற்றங்களினை இரத்து செய்வதாகவும் அவர்கள் இடமாற்றத்திற்கு முன்னர் எந்தப் பாடசாலைகளில் கற்பித்தார்களோ அந்தப் பாடசாலைகளில் அவர்களை மீள அமர்த்துவதற்கும் எதிர்வரும் காலங்களில் ஆசிரியர் இடமாற்றக் கொள்கையை கண்டிப்பாக பின்பற்றி இடமாற்றங்கள் செய்வதாகவும் உறுதி அளித்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து இவ்வழக்கைத் தாக்கல் செய்த பாதிக்கப்பட்ட 14 ஆசிரியர்களினதும் இடமாற்றம் இரத்து செய்யப்பட்டிருக்கிறது. அவர்களுக்குரிய உத்தியோகபூர்வக் கடிதங்களை எதிர்வரும் நாட்களில் வழங்கப்படவுள்ளதை சம்பந்தப்பட்ட தரப்பினர் உறுதி அளித்திருந்தனர்.

இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் சார்பில் சட்டத்தரணிகளான றாஸி முஹம்மட் ஜாபிர் மற்றும் எப். எச். ஏ. அம்ஜாட் ஆகியோர் தோன்றி காத்திரமான வாதங்களை முன்வைத்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-பாறுக் ஷிஹான்-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

படுகொலை செய்யப்பட்ட ஐந்து பல்கலைக்கழக மாணவர்களின் நினைவேந்தல்

east tamil

புளியம் பொக்கனை பாலத்தில் இரண்டு இளைஞர்கள் பலி

east tamil

யானைகளின் தாக்குதலை கட்டுப்படுத்த கோரி கடும் மழைக்குள்ளும் மக்கள் ஆர்ப்பாட்டம்

east tamil

திருகோணமலை மாவட்டத்திற்கு புதிய இடைக்கால அரசாங்க அதிபர் நியமனம்

east tamil

காணிகள் கையகப்படுத்தலை எதிர்த்து குச்சவெளி பிரதேசத்தில் மக்கள் போராட்டம்

east tamil

Leave a Comment