2024 கிழக்கு மாகாண வருடாந்த ஆசிரியர் இடமாற்றங்கள் ரத்து

Date:

கிழக்கு மாகாண பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த ஆசிரியர் இடமாற்றங்களில் பல முறைகேடுகள் இருப்பதாகக் கூறி இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மற்றும் ஆசிரியர் சங்கத் தலைவர் ப்ரியந்த பெர்னாண்டோ உட்பட பாதிக்கப்பட்ட 14 ஆசிரியர்களினால் கல்முனை மாகாண மேல் நீதிமன்றத்தில் கட்டாணை மனு கடந்த மே மாதம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த ஆசிரியர் இடமாற்ற விடயங்களில் ஆசிரியர் இடமாற்ற சபை மற்றும் ஆசிரியர் இடமாற்ற மேன்முறையீட்டு சபை ஆகியன சரியாகக் கட்டமைக்கப்படவில்லை என்றும் கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றக் கொள்கைக்கு முரணாக ஆசிரியர் இடமாற்றங்கள் இடம் பெற்றிருப்பதாகவும் கூறி தங்களது இடமாற்றங்களை ரத்து செய்யக் கோரியும் தங்களது மனுவில் சுட்டிக்காட்டி இருந்தனர்.

இன்று ( 03) வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது பிரதிவாதிகள் சார்பில் தோன்றிய கிழக்கு மாகாண சபை சட்டத்தரணிகள் பாதிக்கப்பட்ட அனைத்து மனுதாரர்களினதும் இடமாற்றங்களினை இரத்து செய்வதாகவும் அவர்கள் இடமாற்றத்திற்கு முன்னர் எந்தப் பாடசாலைகளில் கற்பித்தார்களோ அந்தப் பாடசாலைகளில் அவர்களை மீள அமர்த்துவதற்கும் எதிர்வரும் காலங்களில் ஆசிரியர் இடமாற்றக் கொள்கையை கண்டிப்பாக பின்பற்றி இடமாற்றங்கள் செய்வதாகவும் உறுதி அளித்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து இவ்வழக்கைத் தாக்கல் செய்த பாதிக்கப்பட்ட 14 ஆசிரியர்களினதும் இடமாற்றம் இரத்து செய்யப்பட்டிருக்கிறது. அவர்களுக்குரிய உத்தியோகபூர்வக் கடிதங்களை எதிர்வரும் நாட்களில் வழங்கப்படவுள்ளதை சம்பந்தப்பட்ட தரப்பினர் உறுதி அளித்திருந்தனர்.

இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் சார்பில் சட்டத்தரணிகளான றாஸி முஹம்மட் ஜாபிர் மற்றும் எப். எச். ஏ. அம்ஜாட் ஆகியோர் தோன்றி காத்திரமான வாதங்களை முன்வைத்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-பாறுக் ஷிஹான்-

spot_imgspot_img

More like this
Related

நுரைச்சோலை பொலிஸ் பொறுப்பதிகாரி மீது விசாரணை

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட நுரைச்சோலை காவல் நிலையப்...

ஒரே வங்கிக்கணக்கிலிருந்து முஸ்லிம், சிங்கள அடிப்படைவாதிகளுக்கு சம்பளம்: ராஜபக்சக்களின் திருகுதாளங்களை அம்பலப்படுத்திய அனுர!

முன்னதாக பொது மக்களின் வரிப் பணம் எவ்வாறு அடிப்படைவாதத்திற்கு செலவிடப்பட்டது என்பது...

யாழ் வந்த பிக்குகள் சொன்னதென்ன?

யாழ்ப்பாணத்திற்கு நாங்கள் வந்து வித்தியசமான அனுபவங்களை பெற்றுக்கொண்டுள்ளோம். யாழ்ப்பாண மக்கள் எங்களை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்