யாழ் சாவகச்சேரி பகுதியில் பாம்பு தீண்டி இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
திருணம் செய்து இரண்டு வருடங்களில் இளம் குடும்பஸ்தர் நேற்றிரவு பாம்பு தீண்டி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் – மானிப்பாய் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் குறித்த இளம் குடும்பஸ்தர் நேற்றிரவு வியாழக்கிழமை மாலை 6:00 மணியளவில் பாம்பு தீண்டி உயிரிழந்துள்ளார் .
யாழ் சாவகச்சேரி நுணாவில் வைரவர் கோவில் பகுதியைச் சேர்ந்த ஒரு வயது பெண் குழந்தையின் தந்தையான வினோத் (29) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.



