பிரியாவிடை நிகழ்விலிருந்து திரும்பிய ஆசிரியையும், கணவனும் பலி

Date:

வேறு பாடசாலைக்கு இடமாற்றம் கிடைத்ததை தொடர்ந்து, 5 வருடங்களாக கடமையாற்றிய பாடசாலையில் பிரியாவிடை நிகழ்வில் கலந்து கொண்டு வீடு திரும்பும் போது ஆசிரியை ஒருவரும் அவரது கணவரும் வாகன விபத்தில் உயிரிழந்த சம்பவம் ஒன்று அக்குரஸ்ஸ பிரதேசத்தில் இருந்து பதிவாகியுள்ளது.

மாகந்துர பிரதேசத்தைச் சேர்ந்த இருவரே உயிரிழந்துள்ளனர்.

பிடபெத்தர மெதேரிபிடிய பாடசாலையில் சுமார் 5 வருடங்களாக கடமையாற்றும் ஆசிரியை ஒருவர் வேறு பாடசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டமையினால் இடம்பெற்ற வைபவம் முடிந்து தனது கணவருடன் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போது அக்குரஸ்ஸ, சியம்பலாகொட, பிடபெத்த வீதியில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளார்.

அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள், சொகுசு வேன் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது, அப்பகுதி மக்கள் காயமடைந்தவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்தனர்.

காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு சுமார் 20 நிமிடங்கள் எடுத்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் அக்குரஸ்ஸ வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும் அவர்களது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.

28 வயதான பாக்யா பொரலெஸ்ஸ மற்றும் அவரது கணவர் இந்திக்க சம்பத் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வேனை ஓட்டிச் சென்ற வர்த்தகர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் குடிபோதையில் இருந்தாரா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Share post:

spot_imgspot_img

More like this
Related

அமெரிக்க- ஈரான் பேச்சில் முன்னேற்றமில்லை: ஹோர்முஸ் ஜலசந்தியை முற்றுகையிட உத்தரவிட்ட ட்ரம்ப்

இஸ்லாமாபாத்தில் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தைகளின் போது, ​​ஈரான் தனது அணுசக்தி லட்சியங்களைக்...

பேச்சுவார்த்தையில் அமெரிக்கா அளவுக்கு அதிக நிபந்தனைகள் விதிக்கிறது: ஈரான் தகவல்!

இஸ்லாமாபாத்தில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், பாகிஸ்தானில் ஈரானிய மற்றும் அமெரிக்க...

ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடி அகற்றலுக்கான ஏற்பாடுகள் ஆரம்பம்: அமெரிக்க இராணுவம்

ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகளை அகற்றுவதற்கான "சூழ்நிலைகளை அமைக்கும்" பணியைத் தொடங்கியுள்ளதாகவும், இரண்டு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்