ரணிலுடன் கூட்டணியில்லை

Date:

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதமர் வேட்பாளராக தான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக, எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மேலும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் எந்த ஒரு கூட்டணிக்கும் வாய்ப்பு இல்லை எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து போட்டியிட்டிருந்தால் சஜித் பிரேமதாசவுக்கு இந்த தேர்தலில் வெற்றியீட்டியிருக்க முடியும் என்ற கருத்துக்கு சஜித் பிரேமதாச பதிலளித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச கருத்து வௌியிடுகையில்,

“இலக்கத்தை மட்டும் பார்த்தால் இப்படி ஒரு விடயத்தை சொல்லலாம். ஆனால் ஆழமான அரசியல் அலசலுக்கு சென்றால் அது உண்மையல்ல என்பது புரியும்.”

“நாங்கள் ஐக்கிய மக்கள் கூட்டணியாக முன்னோக்கி செல்வோம். அதனுடன் மக்கள் ஏற்றுக்கொள்ளும் நபருடன் கைகோர்க்கலாம்”

“இன்று, ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்து தொகுதி அமைப்பாளர்களும், அனைத்து எம்.பி.க்களும் ஒருமனதாக என்னை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்துள்ளனர். எனது தலைமையில் தேர்தல் பிரசாரத்தை முன்னெடுத்துச் செல்லவும் பரிந்துரைத்தனர்” என்றார்.

 

spot_imgspot_img

More like this
Related

யாழில். இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் , சேந்தான்குளம் பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் சேத்தான்குளம் பகுதியில்...

நாவிதன்வெளியில் வர்த்தகர்களுக்கான விசேட நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கு

நாவிதன்வெளி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் ஏற்பாட்டில், பிரதேசத்திலுள்ள வர்த்தகர்களுக்கான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்