யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்குள், விரிவுரையாளர்கள் தொடர்பில் அநாகரிகமான சுவரொட்டி ஒட்டிய, கூலிப்படையாக செயற்பட்ட மாணவர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிசார் ஆரம்பித்துள்ளனர்.
வெளிநாட்டு பணத்துக்காக மாணவர்கள் சிலர் கூலிப்படையாக செயற்பட்டு, இந்த காட்டுமிராண்டித்தனமான சுவரொட்டியை ஒட்டியுள்ளனர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தமிழ் பொதுவேட்பாளரை, யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகம் ஆதரிப்பதாக அண்மையில் போலி அறிக்கையொன்று வெளியாகியிருந்தது. பொதுவேட்பாளர் தரப்பின் பின்னணியில் உள்ள சில பேராசிரியர்கள், பீடாதிபதிகளின் கைவரிசையாக இந்த போலி அறிக்கை வெளியாகியிருக்கலாமென கருதப்பட்டது.
இந்த நிலையில், சமூகப்பொறுப்புமிக்க விரிவுரையாளர்கள் 15 பேர் இணைந்து, தமிழ் மக்கள் சரியான முடிவை எடுக்க வேண்டுமென குறிப்பிட்டு, அதற்கான தர்க்கரீதியான காரணங்களையும் குறிப்பிட்டிருந்தனர்.
தமிழனாக தமிழனுக்கு வாக்களியுங்கள், ஒரு அப்பனுக்கு பிறந்தால் சங்குக்கு வாக்களியுங்கள் போன்ற காரணங்களை தவிர, வேறெந்த தர்க்கரீதியான காரணங்களையும் முன்வைக்க முடியாத பொதுவேட்பாளர் தரப்பு, மேற்படி விரிவுரையாளர்களின் வாயை மூட வைப்பதற்காக அநாகரிகமான சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.
பல்கலைக்கழக மாணவர்கள் ஒரு தரப்பினரை புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் சில பணம் கொடுத்து கட்டுப்படுத்தி வரும் நிலையில், புலம்பெயர் அமைப்பொன்றின் பணத்துக்காக கூலிப்படையாக செயற்பட்டு, சில மாணவர்களே இந்த சுவரொட்டியை ஒட்டியுள்ளதாக கருதப்படுகிறது.
பல்கலைக்கழத்துக்கு படிக்கச் சென்றும், சிந்தனை வளர்ச்சியடையாத நபர்கள் இருப்பது யாழ்ப்பாண பல்கலைக்கழகம் குறித்த பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து பொலிசாரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.