மோசடிப் பெண்ணை அடையாளம் காண பொதுமக்களின் உதவி கோரும் பொலிசார்!

Date:

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) 150 மில்லியன் ரூபா நிதி மோசடி தொடர்பில் தேடப்பட்டு வரும் சந்தேகநபர் ஒருவரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

150 மில்லியன் ரூபாய் மதிப்பிலான காணி ஒன்று போலி ஆவணங்கள் மூலம் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக வந்த முறைப்பாட்டையடுத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அந்த பெண் வேறொருவரை போல ஆள்மாறாட்டம் செய்து போலி பத்திரத்தில் கையெழுத்திட்டதாக விசாரணை அதிகாரிகள் கண்டறிந்தனர்.

சந்தேக நபர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவின் 0112-2434504 அல்லது குற்றப் புலனாய்வுப் பிரிவின் செயற்பாட்டு அறை 0112-2422176 என்ற இலக்கத்திற்குத் தொடர்புகொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

வவுனியா மாநகர முதல்வரை பதவிநீக்கும் ஆளுனரின் வர்த்தமானிக்கு இடைக்கால தடை

வவுனியா மாநகரசபை முதல்வர் சு.காண்டீபனை அந்த பதவியிலிருந்தும், உள்ளூராட்சி உறுப்பினர் பதவியிலிருந்தும்...

ஈரான் உயர்மட்ட பேச்சுவார்த்தையாளர்களை கொல்ல இஸ்ரேல் சதித்திட்டம்: அமெரிக்கா எச்சரிக்கை!

இந்த ஆண்டின் தொடக்கத்தில் வாஷிங்டன் தெஹ்ரானுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தபோது, ​​ஈரானின் உயர்மட்டப்...

சட்டத்தரணி ரகித ராஜபக்ஷ வழக்கு பிற்பகல் வரை ஒத்திவைப்பு

முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் புதல்வரான சட்டத்தரணி ரகித ராஜபக்ஷ...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்