மதுபானச்சாலை உரிமத்துக்காக ரணில் ஆதரவு நிலைப்பாடா?: மூச்சும் காட்டாத அங்கஜன்!

Date:

நாட்டில் பல்வேறு வேலை திட்டங்களை முன்னெடுத்து வரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே மீண்டும் ஜனாதிபதியாக வர வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

பல்வேறுபட்ட நெருக்கடியில் இருந்த நாட்டினை மீட்டு தற்போது உள்ள நிலைக்கு கொண்டு வந்தவர் ரணில் விக்ரமசிங்க அவர்களே எனவே அவருக்கே வாக்களிக்க வேண்டும் என இன்று யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்தார்.

மதுபானச்சாலை உரிமத்தை பெற்றுக்கொண்டு, ரணில் ஆதரவு நிலைப்பாடு எடுத்துள்ளதாக அங்கஜன் மீது விமர்சனம் எழுந்துள்ள நிலையில், அது பற்றி அவர் மூச்சும் காட்டவில்லை.

இதன் போது ஊடகவியலாளர் ஒருவர் தமிழரசுக் கட்சி நிலைப்பாடு தொடர்பிலே எழுப்பப்பட்ட கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார்.

தமிழரசை கட்சியை நம்பிருந்த மக்களுக்கு தமிழரசு கட்சியினர் செருப்படி வழங்கியிருக்கிறார்கள் என்றும் அவர்கள் தங்களுக்குள் ஒற்றுமை இல்லாத பல்வேறு குழப்ப நிலைக்கு சென்றுள்ளார்கள் இதனால் ஜனாதிபதியை ஆதரிப்பது தொடர்பிலே பல்வேறு குழப்பம் இல்லை வருகிறது என்றும் இதன்போது குறிப்பிட்டார்.

மேலும் ரணில் விக்ரமசிங்க நாட்டிலே கடந்த ஆட்சி காலத்தில் ஏற்படுத்திய பல்வேறு வேலை திட்டங்கள் தொடர்பிலும் தமது நிலைப்பாடு தொடர்பிலும் இதன் போது தெளிவு படுத்தினார்.

நாமல் ராஜபக்ஷ நேற்றைய தினம் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தமை தொடர்பிலும் அவர் தொடர்பான சில கேள்விகளுக்கும் பதிலளித்தார்

spot_imgspot_img

More like this
Related

சாவகச்சேரி உபதவிசாளர் விவகாரம்: இடைக்கால கட்டளைக்கு நீதிதன்றம் மறுப்பு

சாவகச்சேரி நகராட்சி மன்றம் உப தவிசாளர் மற்றும் சபையின் உறுப்புரிமையிலிருந்து தன்னை...

நீர்கொழும்பு சிறைக்கைதிகள் இடமாற்றம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்த கைதிகளில் ஒரு தொகுதியினர், கண்டி பல்லேகலையில் அமைந்துள்ள...

நீர்கொழும்பு சிறை விவகாரத்தை ஆராய 3 பேர் கொண்ட குழு!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக முறையான மற்றும் விரிவான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்